அரசியல் சினிமா

தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்ற கமல்ஹாசன்.! மாஸ் காட்டிய பிக்பாஸ் ஆரி ரசிகர்கள்..! வைரல் வீடியோ.!

Summary:

கமல் தேர்தல் பிரச்சாரம் செய்யும் இடத்தில் ஆரி ரசிகர்கள் கோஷமிட்டுள்ளனர்.

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளநிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. தமிழ்நாட்டில் அதிமுக, அமமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் எனப் பல முனை போட்டி நிலவுகிறது. 

இதனையடுத்து அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பல இடங்களில் தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

கமல்ஹாசன் தற்போது அரசியல், பிக்பாஸ், திரைப்படம் என செம்ம பிஸியாக இருந்து வருகிறார். விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி  90 நாட்களை கடந்து நாளுக்கு நாள் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் சென்று கொண்டுள்ளது. இந்தநிலையில் கமல் அவரின் அரசியல் கட்சியின் பிரச்சத்திற்காக சென்றபோது, கூடியிருந்த மக்களில் ஒரு கூட்டம் பிக்பாஸ் ஆரியின் பெயரை சொல்லி கரகோஷம் எழுப்பியுள்ளனர். ஆரியின் ரசிகர்கள், கமலின் பிரச்சாரத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோவை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.


Advertisement