ரஜினிக்கு கொரோனா டெஸ்ட்.. அண்ணாத்த படப்பிடிப்பு திடீர் நிறுத்தம்.. 8 பேருக்கு பாதிப்பு உறுதி..8 persons corona test positive in Annaththa movie spot

ரஜினிகாந்த் நடித்துவரும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் இடத்தில் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான படம் அண்ணாத்த. படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்துகொண்டிருந்தநிலையில் கொரோனா காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது, தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தொடங்கப்பட்டது.

படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள சூப்பர் ஸ்டார் ரஜினி, நயன்தாரா ஆகியோர் தனி விமானம் மூலம் ஷூட்டிங் நடைபெறும் இடமான ஹைத்ராபாத்திற்கு சென்றனர். அவர்களை தொடர்ந்து மீனா, குஷ்பு ஆகியோரும் படப்பிடிப்பு நடைபெறும் இடத்திற்கு சென்றனர்.

rajini

ரஜினிகாந்த் விரைவில் அரசியல் வேளைகளில் ஈடுபட இருப்பதால், அவர் விரைவில் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்புகளை முடித்துவிட்டு சென்னை வருவதாக இருந்தது. இந்நிலையில் படப்பிடிப்பில் கலந்துகொள்பவர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி சியப்பட்டுள்ளதாகவும், இதனால் அண்ணாத்த படப்பிடிப்பு தற்காலிமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ரஜினிக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், அவருக்கு நெகட்டிவ் என பரிசோதனை முடிவு வந்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.