இயக்குனர் பாரதிராஜா மகன் தாஜ்மஹால் நாயகன் காலமானார்.! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!
மிகப்பெரிய ஹிட் படத்தில் நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ண சூர்யா.. எந்த படம் தெரியுமா.?

2000ம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய "அலைபாயுதே" திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் மாதவன். தொடர்ந்து மின்னலே, டும் டும் டும், அன்பே சிவம், இறுதிச் சுற்று, கன்னத்தில் முத்தமிட்டால் என்று பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.
2004ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் "7ஜி ரெயின்போ காலனி".தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஏ.எம்.ரத்னம் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். படத்தில் ரவி கிருஷ்ணா ஹீரோவாகவும், சோனியா அகர்வால் ஹீரோயினாகவும் நடித்திருந்தனர்.
ஆனால் முதலில் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க சூர்யா மற்றும் மாதவனிடம் தான் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், ஆனால் அவர்களால் அந்த நேரத்தில் நடிக்க முடியாமல் போனதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய ரவி கிருஷ்ணா, "சூர்யா மற்றும் மாதவன் இருவராலும் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனதால் என்னை நடிக்க கேட்டனர்" என்று கூறியுள்ளார். ரவி கிருஷ்ணா அந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம் ரத்தினத்தின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.