2023ல் குரோம்பேட்டை வெற்றி திரையரங்கில் வெளியாகி டாப் 10 பட்டியலில் இடம்பெற்ற திரைப்படங்கள்: லிஸ்ட் இதோ.!

2023ல் குரோம்பேட்டை வெற்றி திரையரங்கில் வெளியாகி டாப் 10 பட்டியலில் இடம்பெற்ற திரைப்படங்கள்: லிஸ்ட் இதோ.!



2023 Chennai Chrompet Vetri Cinemas top 10 Movies 

 

உலகமே 2023ம் ஆண்டுக்கு விடைகொடுத்து, 2024ம் ஆண்டை வரவேற்க தயாராகி வருகிறது. இதனைமுன்னிட்டு நடப்பு ஆண்டில் நடந்த நிகழ்வுகளை நாம் ஒவ்வொன்றாக திரும்பி பார்த்து வருகிறோம். திரைப்படங்கள், திரைப்பிரபலங்கள், அரசியல் கட்சியினரின் வாக்குறுதி, நமது மனதை உலுக்கிய நிகழ்வுகள் போன்றவற்றை நினைவுகூர்ந்து வருகிறோம். 

இந்நிலையில், சென்னையில் உள்ள குரோம்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் வெற்றி திரையரங்கில், இந்த ஆண்டில் அதிக டிக்கெட் விற்பனை செய்த திரைப்படங்கள் தொடர்பான பட்டியலை வெளியிட்டுள்ளது. வெற்றி திரையரங்கம் கடந்த 50 ஆண்டுகளை கடந்து திரைப்படங்களை திரையிட்டு வருகிறது. நடப்பு ஆண்டில் வெற்றி திரையரங்கில் வெளியாகி, வரவேற்பை பெற்ற முதல் 10 இடங்களின் பட்டியலை வெற்றி திரையரங்கு நிர்வாகம் வெளியிட்டு இருக்கிறது.

இதில் பத்தாவது இடத்தில் வெற்றிமாறன் - சூரி கூட்டணியில் உருவான விடுதலை திரைப்படம், ஒன்பதாவது இடத்தில் சந்தானத்தின் டிடி ரிட்டன்ஸ், எட்டாவது இடத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான மாமன்னன் திரைப்படமும், ஏழாவது இடத்தில் சிவகார்த்திகேயன், மிஷ்கின் நடிப்பில் வெளியான மாவீரன் திரைப்படமும், ஆறாவது இடத்தில் நடிகர் விஷால், எஸ்.ஜே.சூர்யா கூட்டணியில் உருவாகி வெளியான மார்க் ஆண்டனி திரைப்படமும் இடம்பெற்றுள்ளது. 

அதனைத்தொடர்ந்து, ஐந்தாவது இடத்தில் அஜித் குமார் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படமும், நான்காவது இடத்தில் விஜயின் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படமும், மூன்றாவது இடத்தில் சோழர்களின் வரலாற்றை மையப்படுத்தி பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் பாகம் 2 திரைப்படமும், இரண்டாவது இடத்தில் விஜய், சஞ்சய், அர்ஜுன் உட்பட பலர் நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ திரைப்படமும் இடம்பெற்றுள்ளது. 

இறுதியாக இந்த ஆண்டு வெற்றி திரையரங்கில் அதிக டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்ட திரைப்படமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விநாயகன், ரம்யா கிருஷ்ணன் உட்பட பலர் நடித்து நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் முதல் இடத்தை பிடித்துள்ளது.