தொடர்ந்து குறைந்து கொண்டே வரும் பெட்ரோல், டீசல் விலை! இன்றைய விலை நிலவரம்!



Prtrol, diesel

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை நிர்ணயித்து வந்தது. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை தற்போது, கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முறையை எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்தது.

அதன்படி தற்போது கச்சா எண்ணெயின் விலை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதால் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையும் குறைந்து கொண்டே வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

petrol

தற்போது பெட்ரோலின் விலை நேற்றைய விலையிலிருந்து 31 காசுகள் குறைந்த ஒரு லீட்டர் பெட்ரோல் ₹73.02 ஆகவும், டீசலின் விலை நேற்றைய விலையிலிருந்து 27 காசுகள் குறைந்து ஒரு லீட்டர் ₹66.48 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.