PAN Card New Update: பணம் எடுக்க, டெபாசிட் செய்ய பான் கார்டு கட்டாயம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!



PAN Card Mandatory for Cash Transactions Above ₹10 Lakh per Financial Year New Government Rules

ரூ.10 லட்சத்துக்கும் மேல் இனி பணம் எடுக்க அல்லது டெபாசிட் செய்ய பான் கார்டு தேவை என மத்திய அரசு அறிவித்துள்ளது.

புதிய திருத்தங்கள்:

New PAN Card Rules Explained: தனிநபரின் முக்கிய ஆவணமாக இருந்து வரும் பான் கார்டில் மத்திய அரசு புதிய அப்டேட்களை வெளியிட்டு இருக்கிறது. ஏற்கவனே பான் கார்டு அரசுத்திட்டம் முதல் வங்கிப்பரிவர்த்தனை வரை பயன்படுத்தப்படுகிறது. இதனை மத்திய அரசின் வருமான வரித்துறை நிர்வகித்து வருகிறது. புதிய வருமான வரியின் கீழ் பான் கார்டு சேவைகளில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: நகைப்பிரியர்களுக்கு பேரிடி.. புதிய உச்சத்தில் தங்கம், வெள்ளி.. ரூ.90,000ஐ நெருங்குகிறது.!

வரம்பு அதிகரிப்பு:

யுபிஐ அறிமுகமான பின்னர் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் புதிய வருமான வரித்துறை விதிகளின்கீழ், ரொக்கமாக பணம் டெபாசிட் செய்தல், பணம் எடுத்தால், மோட்டார் வாகனம், சொத்து வாங்குதல் உள்ளிட்ட சேவைகளுக்கு பான் வரம்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்த புதிய திருத்தங்கள் ஏப்ரல் 01, 2026 முதல் அமலுக்கு வருகிறது.

Breaking

விதியில் தளர்வு:

இந்த திருத்தத்தின்படி, ஒரு நிதியாண்டில் வங்கிக்கணக்கில் மொத்த ரொக்க டெபாசிட் அல்லது பணம் எடுத்தால் ரூ.10 லட்சத்துக்கும் மேல் இருந்தால், பான் எண் கட்டாயம் ஆகும். ஒரு நாளில் ரூ.50,000 க்கும் மேல் டெபாசிட் செய்தாலோ அல்லது பணம் எடுத்தாலோ பான் நம்பர் தேவைப்படும் என்ற விதியில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.

டூவீலர் வாங்கினாலும் தேவை:

மோட்டார் வாகனம் வாங்கும் பட்சத்தில், ரூ.5 லட்சத்துக்கும் மேல் தொகை கொடுக்க நேர்ந்தால் பான் நம்பரும் சமர்ப்பிக்கப்பட வேண்டும். பழைய திட்டத்தில் இருசக்கர வாகனம் தவிர்த்து பிற வாகனம் வாங்கும்போது பான் எண் தேவைப்பட்ட நிலையில், தற்போது இருசக்கர வாகனத்திற்கு பான் எண் பதிவு செய்யப்பட வேண்டும். இது ரூ.5 லட்சத்துக்கும் மேல் உள்ள இருசக்கர வாகனத்தை வாங்கும்போது கட்டாயம் ஆகும்.

Breaking

தொகை வரம்பு மாற்றம்:

ஹோட்டல், உணவகம், விருந்து அரங்கம், மாநாடு நிகழ்ச்சிகளில் மேலாளர்களுக்கு ரூ.1 லட்சத்துக்கும் மேல் பணம் செலுத்தினால் பான் நம்பர் கட்டாயம். முன்னதாக இந்த சேவைகளுக்கு ரூ.50,000 க்கும் மேல் பணம் செலுத்தினால் பான் தேவை என்ற விதி இருந்தது. தற்போது அந்த வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. 

சொத்து வாங்குவது / விற்பது:

அதேபோல, அசையா சொத்துக்கள் வாங்குதல் அல்லது விற்பனை செய்தல் போன்றவைக்கு, ரூ.10 லட்சத்துக்கும் மேல் பரிவர்த்தனை செய்தால் பான் கார்டு கட்டாயம் ஆகும். ஆயுள் காப்பீடுக்கு பிரீமியம் தொகையாக ஒரு நிதியாண்டில் ரூ.50,000 க்கும் மேல் பணம் செலுத்தினால் பான் எண் கட்டாயம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: RTO Registration: சொந்த வாகன பதிவு.. தமிழகத்தில் இன்று முதல் அமலுக்கு வந்த புதிய வசதி..!