இந்தியா வர்த்தகம்

"கடன் கேட்டு அலைபவரா நீங்கள்..இனி கவலைய விடுங்க.." உங்களுக்காக பிரதமர் மோடியின் புதிய அதிரடி திட்டம்! இனி 59 நிமிடத்தில் உங்களுக்கான கடன்

Summary:

modi new scheme to get loan

சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் முன்னேற்றத்திற்காக பிரதமர் நரேந்திர மோடி தீபாவளி பரிசாக ஒரு புதிய அறிவிப்பை நேற்று வெளியிட்டுள்ளார்.

சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்குக் கடன் வழங்குவது மட்டும் இல்லாமல் 12 முக்கிய அறிவிப்புகளைத் தீபாவளி பரிசாக அளித்துள்ளார்.

தில்லியில் நடந்த குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கான நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியபோது, ஜி.எஸ்.டி செலுத்தும் சிறு குறு தொழில் செய்வோரை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு தொழில் கடன் வழங்க, தனி இணையதளம் உருவாக்கப்பட உள்ளது. இந்த இணையதளம் மூலம் விண்ணப்பிப்போருக்கு, 59 நிமிடங்களில், 1 கோடி ரூபாய் வரை, கடன் வழங்கப்படும்.

சிறு நிறுவனங்கள் 1 கோடி ரூபாய் வரை கடன் பெற்று இருக்கும் போது அவற்றுக்கு 2 சதவீதம் ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு 59 நிமிடத்தில் 1 கோடி ரூபாய் அளிப்பது மட்டும் இல்லாமல் அவற்றில் செய்யப்படும் முதலீட்டினை 20 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக அதிகரிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தொழிலாளர் சட்டங்களில் தளர்வு, கம்பெனி சட்டங்களில் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை தீபாவளி பரிசாக அறிவித்துள்ளார். ஜிஎஸ்டி வரி செலுத்தும் நிறுவனங்கள் ஜிஎஸ்டி இணையதளத்தின் மூலம் எளிமையாக கடன் பெறும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது.

சிறிய தொழிற்சாலைகள், ஆண்டுக்கு ஒரு முறை கணக்கு தாக்கல் செய்யும்படி, தொழிலாளர் சட்டம் தளர்த்தப்படும். கம்பெனி சட்டத்தின் கீழ், சிறிய குற்றங்களுக்கான அபராத தொகையை குறைக்க, சட்ட திருத்தம் செய்யப்படும்.இந்த புதிய மாற்றங்கள், சிறு தொழில் செய்வோர் வாழ்வில், வரலாற்று சிறப்புமிக்கதாக இருக்கும்; இது, தொழில்முனைவோர் மற்றும் தொழிலாளர்களுக்கு, மத்திய அரசின் தீபாவளி பரிசு என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.  


Advertisement