வர்த்தகம் டெக்னாலஜி

சரியும் அமெரிக்க பொருளாதாரம்; இந்திய ஐடி நிறுவனங்களில் நிலை என்னவாகும்!

Summary:

Economy down of america will impact indian it sector

அமெரிக்காவில் 2018 ஆம் ஆண்டு பொருளாதார வளர்ச்சியை விட 2019 ஆம் ஆண்டு மிகவும் குறைவாகவே இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த பொருளாதார வீழ்ச்சி நிச்சயம் இந்திய IT நிறுவனங்களை பாதிக்கும் எனபதில் எந்த சந்தேகமும் இல்லை. 

2018-ம் ஆண்டு 2.8 சதவீதமாக இருந்த
அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி  2019-ம் ஆண்டில் 2.3 சதவீதமாக குறையும் என என மார்கன் ஸ்டான்லி கணித்துள்ளது. அமெரிக்காவின் இந்த பொருளாதார வீழ்ச்சியால் 167 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்திய IT நிறுவனங்களின் வருவாய் மற்றும் மதிப்பு நிச்சயம் பாதிக்கப்படும் என வல்லுநர்கள் கருதுகின்றனர். 

இந்தியாவின் டாப் 5 IT நிறுவனங்களான டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், விப்ரோ மற்றும் டெக் மஹிந்தரா போன்றவைகளின் வருவாய் 55 முதல் 70 சதவீதம் அமெரிக்காவிலிருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நாட்டின் பொருளாதாரம் மந்தமாக இருக்கும்போது அமெரிக்காவின் ஃபார்ச்யூன் 1000 நிறுவனங்கள் டிஜிட்டல் தொழில்நுட்பங்களுக்காக செலவு செய்வதைக் குறைக்கும். இதனால் டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ, ஹெச்சிஎல் உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய ஐ.டி., நிறுவனங்களின் வருவாய் பாதிப்படையும். 

டிசிஎஸ் நிறுவனம் 2019 ஜனவரி 10-ம் தேதியும், விப்ரோ 2019 ஜனவரி 18-ம் தேதியும் தங்களது காலாண்டு முடிவுகளை அறிவிக்க உள்ளன. அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சி இந்நிறுவனங்களை எந்த அளவிற்கு பாதித்துள்ளது என்பதை தெரிந்துகொள்ள அனைவரும் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். 


Advertisement