அஜித் கார் ரேஸ்… விஜய் வருகை! சில்வர்ஸ்டோனில் நடக்கப்போவது என்ன?
துணி காய வைப்பதில் தகராறு.. பெண் ஹெல்மட்டால் அடித்துக்கொலை.. சென்னையில் அதிர்ச்சி.!
பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு இடையே நடந்த தகராறில் பெண் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.
குடியிருப்பு:
சென்னையில் உள்ள நன்மங்கலம், பெருமாள் கோயில் தெருவில் வசித்து வருபவர் புருஷோத்தமன். இவரின் மனைவி மஞ்சுளா (வயது 47). தம்பதிகள் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்கள். இவர்களின் குடியிருப்புக்கு அருகில் விஜி என்ற 45 வயதுடைய பெண்மணி வசித்து வருகிறார்.
இதையும் படிங்க: Sivagangai News: 23 வயது இளைஞரை ஓடஓட விரட்டி கொடூரமாக கொன்ற கும்பல்.. கண்ணீரில் உறவினர்கள்.!
வாகன நிறுத்துமிடம்:
கடந்த மாதம் 21 ம் தேதியன்று மஞ்சுளா தனது குடியிருப்பில் வாகன நிறுத்துமிடம் இருக்கும் பகுதியில், கொடியில் துணிகளை காயவைத்துள்ளார். அச்சமயம் அங்கு வந்த விஜி, மஞ்சுளாவின் துணிகளை சற்று தள்ளி போடுமாறு கூறி இருக்கிறார். மேலும், துணிகளை கீழே தள்ளிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
வாக்குவாதம்:
இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், திடீரென கைகலப்பு உண்டாகி இருக்கிறது. இதனால் ஒருவரையொருவர் தாக்கிய நிலையில், விஜி அங்கிருந்த தலைக்கவசத்தை எடுத்து மஞ்சுளாவின் முகம், தலையில் தாக்கி இருக்கிறார்.
மயக்கம்:
இந்த சரமாரி தாக்குதலில் நிலைகுலைந்துபோன மஞ்சுளா, மயங்கி இருக்கிறார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், மஞ்சுளாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தொடர் சிகிச்சையில் இருந்து வந்த மஞ்சுளா, சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.
விசாரணை:
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மஞ்சுளாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: காதலனின் கடனை அடைக்க கொள்ளைக்காரியாக மாறிய சிந்து.. கோவையில் நடந்த திடுக் சம்பவம்..!