உச்சகட்ட அதிர்ச்சி! ஒரே நாளில் சவரனுக்கு இவ்வளவு உயர்வா! இன்றைய தங்கம் விலை நிலவரம்...



chennai-gold-price-hike-july-22

சென்னையில் ஆபரண தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்துவரும் நிலையில், இன்று மீண்டும் தங்கம் விலை உயர்வு பதிவாகியுள்ளது. இன்றைய நிலவரப்படி, 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.840  உயர்ந்த நிலையில் ஒரு சவரன் ரூ.74280 ஆக உயர்ந்துள்ளது. அதாவது, ஒரு கிராம் ரூ. 9285 ரூபாய் ஆக விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த ஐந்து நாட்களில் மட்டும் தங்கம் விலை ரூ.1480 வரை அதிகரித்துள்ளது. இந்த நிலை நகை வாங்க விரும்பும் மக்களில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், 24 கேரட் தூய தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.10129, ஒரு சவரனுக்கு ரூ.81032 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

இத்துடன், வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.128, ஆகவும் கிலோவுக்கு ரூ.128000 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

 

இதையும் படிங்க: அதிர்ச்சி மேல் அதிர்ச்சி! ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை! தொடர்ந்து 5-வது நாளாக உயர்வு! இன்றைய தங்கம் விலை நிலவரம்...