கள்ளகாதலுக்காக இப்படியும் செய்வார்களா .... பெற்ற தயாள் மகனுக்கு ஏற்பட்ட கொடூரம் !!

கள்ளகாதலுக்காக இப்படியும் செய்வார்களா .... பெற்ற தயாள் மகனுக்கு ஏற்பட்ட கொடூரம் !!


boy killed by mom

திருச்சி அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் பெற்ற மகன் என்றும் பாராமல் தாய் கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள சாந்தபுரத்தில் வசிப்பவர் மீனாம்பாள் (வயது 40). இவர் ஒரு கட்டிடத் தொழிலாளி. மீனாம்பாளின் கணவர் வீரமணி கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு கேன்சர் நோயால் இறந்து விட்டார்.

இதனால் மீனாம்பாள் தனது ஒரே மகனான அங்கு ராஜூடன் (14) தனியாக வசித்து வந்தார். அங்குராஜ் திருப்பராய்த்துறையில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) காலை அங்குராஜ் வீட்டில் மயங்கி கிடந்ததாக கூறி அங்குள்ள மருத்துவமனைக்கு மீனாம்பாளும், அவரது தோழி லெட்சுமியும் தூக்கி சென்றனர்.

அங்கு சிகிச்சை அளிக்க முடியாததால் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அங்குராஜை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதனால் அங்குராஜ் உடலை வீட்டிற்கு கொண்டு வந்தனர்.

இதற்கிடையே அங்குராஜ் உடல்நிலை சரியில்லாமல் சாகவில்லை என்றும், அவரது சாவில் மர்மம் இருப்பதாகவும் சோமரசம்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் காவலர்கள் விரைந்து சென்று அங்குராஜ் உடலை கைப்பற்றினர்.

அங்குராஜ் உடலை திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்தனர். அப்போது அவர் கழுத்து நெரிக்கப்பட்டதால் மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்தது தெரியவந்தது.

trichy

இதனால் போலீசாரின் சந்தேக பார்வை தாய் மீனாம்பாள் மற்றும் அவரது தோழி லெட்சுமி மீது விழுந்தது. அவர்கள் இருவரையும் போலீஸ் காவலில் வைத்து துருவி துருவி விசாரித்தனர்.

அப்போது கள்ளக்காதல் பிரச்சனையில் பெற்ற மகன் என்றும் பாராமல் மீனாம்பாள் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

கணவர் வீரமணி இறந்த நிலையில், கட்டிட வேலைக்கு சென்ற மீனாம்பாளுக்கு அங்கு கொத்தனாராக வேலை பார்த்த இனியானூர் மேலத்தெருவைச் சேர்ந்த முத்தழகு என்ற முத்தையன் (48) என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது.

அடிக்கடி முத்தையனுடன் வீட்டிலேயே மது குடித்து விட்டு மீனாம்பாள் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் முத்தையனின் மற்றொரு கள்ளக்காதலியான லெட்சுமியும் இவர்களுடன் சேர்ந்து மது குடித்து விட்டு அடிக்கடி வீட்டில் ஜாலியாக இருந்துள்ளனர்.

முதலில் அக்கம் பக்கத்தினர் முத்தழகனும் லெட்சுமியும் கணவன், மனைவியாக இருக்கலாம் என நினைத்து சாதாரமாக விட்டு விட்டனர். ஆனால் அங்குராஜ் பள்ளிக்கு சென்றதும் அடிக்கடி முத்தழகனும், லெட்சுமியும் மீனாம்பாள் வீட்டிற்கு வருவதும் அவர்கள் மது குடித்து விட்டு ஜாலியாக இருப்பதை அக்கம் பக்கத்தினர் பார்த்ததும் அதிர்ச்சியடைந்தனர். இதை அங்குராஜிடம் கூறியுள்ளனர்.

இதையடுத்து அங்குராஜ் அவர்கள் நடவடிக்கையை கண்காணித்தான். ஒருமுறை 3 பேரும் வீட்டில் ஜாலியாக இருப்பதை நேரில் பார்த்து விட்டான். இதனால் மனம் வெறுத்து போன அங்குராஜ் தனது தாயை உறவினர்களிடம் கூறி கண்டித்து திருத்தி விடலாம் என நினைத்தான்.

உறவினர்கள் இது குறித்து மீனாம்பாளிடம், கள்ளக்காதலை கைவிடும்படி கூறினர். ஆனால் மீனாம்பாள் முத்தழகனை பிரிய மனம் இல்லாததோடு தனது கள்ளக்காதலை உறவினர்களிடம் மகன் அங்குராஜ் கூறி அவமானப்படுத்தி விட்டானே என ஆத்திரம் அடைந்தார்.

இது குறித்து முத்தழகன், மீனாம்பாள், லெட்சுமி ஆகியோர் கூடி அடுத்து என்ன செய்யலாம் என குடித்து விட்டு ஆலோசனை செய்தனர். அப்போது அங்குராஜை தீர்த்து கட்டுவது என முடிவு செய்தனர். இதற்கான திட்டத்தை முத்தழகன் தீட்டினார்.

கடந்த வியாழக்கிழமை இரவு அங்குராஜிற்கு அதிக தூக்க மாத்திரை கலந்த ஊட்டச்சத்து பானத்தை மீனாம்பாள் கொடுத்தார். அதை குடித்த அங்குராஜ் தூங்கி விட்டார். அப்போது மீனாம்பாளும், லெட்சுமியும் அங்குராஜ் கழுத்தை கயிற்றால் நெரித்தனர்.

10 மாதம் வயிற்றில் சுமந்து பெற்ற மகன் என்றும் பாராமல் தன் கண் எதிரில் அங்குராஜ் துடிதுடித்து சாவதை மீனாம்பாள் கண்டு கொள்ளாமல் தோழியுடன் சேர்ந்து கயிற்றால் நெரித்தார். இதில் மூச்சுத்திணறி அங்குராஜ் இறந்தார்.

அங்குராஜை கொலை செய்ததை கள்ளக்காதலன் முத்தழகனிடம் செல்போனில் இருவரும் தெரிவித்துள்ளனர். உடனே முத்தழகன் மருத்துவமனைக்கு கொண்டு சென்று தற்கொலை நாடகம் ஆடும்படி கூறியுள்ளார்.

அதன்படி நாடகமாடிய மீனாம்பாளும், லெட்சுமியும் குட்டு வெளிப்பட்டதால் போலீசில் சிக்கி கொண்டனர். இருவரும் திருச்சி மாஜிஸ்திரேட் கோர்ட் எண்.5-ல் ஆஜர் படுத்தப்பட்டு திருச்சி மகளிர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

கள்ளக்காதலிகள் போலீசில் சிக்கி கொண்டதை அறிந்ததும் முத்தழகன் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.