இந்தியா சமூகம்

14 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; கலவர பூமியாகும் குஜராத்..!

Summary:

14yrs old girl sex tourcher in gujart

14 வயது நிரம்பிய குஜராத் சிறுமியை அங்கு தொழிலாளராக பணிபுரிந்துவந்த பீகாரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பும் கலவரமும் ஏற்பட்டது ஏற்பட்டுள்ளது. இதனால் வட மாநிலத் தொழிலாளர்கள் குஜராத்தை விட்டு வெளியேறி வருகிறார்கள்.

குஜராத்தில் உள்ள அகமதாபாத் நகரிலிருந்து 116 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது சபர்கந்தா. இப்பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை பீகார் மாநில தொழிலாளர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை தொடர்ந்து சபர்கந்தா, அகமதாபாத், பதான், மேசான ஆகிய பகுதிகளில் பெரும் பதற்றமும் கலவரமும் எழுந்துள்ளது.

Related image

தொடர்ந்து பீகார், உத்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்களிலிருந்து குஜராத்தில் பணி புரியும் வடமாநில தொழிலாளர்கள் பல இடங்களில் தாக்கப்படுவதாக தகவல்கள் வந்துள்ளது. இதனால் போலீசார் தீவிர நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

தாக்குதலில் ஈடுபட்ட 150க்கும் மேற்பட்டோர்  கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலில் தாக்கூர் சேனா என்ற அனுப்பினர் தீவிரமாக இறங்கியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இந்த நிலையில் தாக்கூர் இன காங்கிரஸ் எம்எல்ஏவான அல்பேஷ் தாக்கூர், யாரும் தாக்குதலில் ஈடுபட வேண்டாம்; தாக்கூர் இன மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


 


Advertisement