உலகம் லைப் ஸ்டைல்

மெதுவா.. மெதுவா.. ஆட்டுக்கு பிரசவம் பார்த்த குட்டிப் பாப்பா.. வைரல் வீடியோ!

Summary:

ஆட்டுக்கு பிரசவம் பார்த்த குட்டி குழந்தையின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

ஆட்டுக்கு பிரசவம் பார்த்த குட்டி குழந்தையின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

Figen @TheFigen என்ற டிவிட்டர் பயனர் ஒருவர் இந்த காட்சியை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சுமார் 44 வினாடிகள் ஓடும் அந்த வீடியோ காட்சியில், ஏற்கனவே இரண்டு குட்டிகளை ஈன்றுவிட்டு, மூன்றாவது குட்டியை பெற கஷ்டப்பட்டு கொண்டிருந்த சமயத்தில், இந்த குழந்தை தானாக முன்வந்து ஆட்டுக்கு உதவி செய்கிறது.

மேலும் ஆட்டுக்குட்டி வெளியே வந்ததும் அதன் வாய் மற்றும் கால்களை சுத்தம் செய்துவிட்டு, அந்த குட்டியை அதன் தாயிடம் இழுத்துச்சென்று விடுகிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் செம வைரலாகிவருகிறது.

மேலும் இந்த வீடியோவை பதிவிட்ட அவர், "நான் இவ்வளவு இளமையான விலங்கு மருத்துவரை கண்டதில்லை" எனவும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


Advertisement