Video : துப்பாக்கியை நெஞ்சில் வைத்து மிரட்டிய பெண்! என்ன காரணம் தெரியுமா? பெட்ரோல் பங்கில் நடந்த திடுக்கிடும் சம்பவம்! வைரலாகும் வீடியோ...

உத்திரபிரதேசம் மாநிலத்தின் பில்கிராம் பகுதியில் நடந்த ஒரு பாதுகாப்பு மீறல் சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் பரவலாக வைரலாகிறது. இது பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
காரில் இருந்து இறங்க சொல்லவே துப்பாக்கி மிரட்டல்
சிஎன்ஜி நிரப்பும் பணியில் இருந்த ரஜ்னீஷ் என்பவர், பாதுகாப்பு காரணங்களுக்காக காரில் வந்தவர்களை இறங்குமாறு கேட்டார். அந்த வேளையில், ஷாஹாபாத் பகுதியை சேர்ந்த எஹ்சான் கான் என்பவர் தனது குடும்பத்துடன் காரில் வந்திருந்தார். அவரது மகள் அரிபா, ரிவால்வரை எடுத்து, ஊழியரின் மார்பில் வைத்து சுடுவேன் என மிரட்டிய வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
போலீசில் புகார் மற்றும் நடவடிக்கை
பாதிக்கப்பட்ட ஊழியர் ரஜ்னீஷ், சம்பவத்தை குறித்து பில்கிராம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவருடன் வீடியோ ஆதாரமும் வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, ஹர்தோய் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நீரஜ் யாதவ் பேசியதாவது, அரிபா மீது சட்டப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், சட்டப்படி தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: காதல் நடனமா! வாழை தோப்பில் இரண்டு பாம்புகள் ஒன்றாக பின்னிப்பிணைந்த அபூர்வ நடனம்! இணையத்தில் தீயாய் வைரலாகும் வீடியோ...
பாதுகாப்பு விதிகள் மீறப்படுவதால் ஊழியர்களின் அச்சம்
இந்தச் சம்பவம் பெட்ரோல் பம்ப் ஊழியர்களுக்கு பாதுகாப்பு குறித்து ஒரு பெரும் எச்சரிக்கையை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் விதிகளை பின்பற்றவில்லை என்றால், இது போன்ற தீவிர பிரச்சனைகள் உருவாகும் வாய்ப்பு அதிகமாகும்.
दीदी की गुंडई समझिये। हरदोई में CNG भराने को लेकर विवाद हुआ. दीदी ने सेल्समैन के सीने पर रिवॉल्वर तान दी.
अब महिला अरीबा खां, हुस्नबानो, एहसान खां पर FIR दर्ज कर ली गई है और रिवॉल्वर जब्त कर ली गई है. घटना UP के हरदोई की है. pic.twitter.com/6bXEMCOA0B
— Priya singh (@priyarajputlive) June 16, 2025
இதையும் படிங்க: Video : கருப்பு நாரையின் வேட்டையில் வாய்வரை வந்து துல்லியமாக எஸ்கேப் ஆன மீன்! நாரையின் பரிதாப நிலை! பலமுறை பார்க்க தூண்டும் காட்சி....