உலகம்

பஸ், ரயிலில் தான் இப்படி செய்வாங்க!. விமானத்திலுமா? இளம்பெண்ணின் அதிர்ச்சி வீடியோ!.

Summary:

young girl entered in runway in airport

இந்தோனேசியாவின் பாலி விமான நிலையத்திலிருந்து ஜகார்த்தாவிற்கு செல்லும் சிட்டிலிங்க் விமானம் ஓடுதளத்தில் இருந்து புறப்படத் தயாரான போது, விமானத்தை தவறவிட்ட பெண் பயணி ஒருவர் விமானத்தை துரத்திப் பிடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் ஓடுதளத்தில் அத்துமீறி நுழைந்துள்ளார். 

 ஹனா என்ற பெண் விமானநிலையத்திற்கு தாமதமாக வந்தது மட்டுமின்றி அங்குள்ள பாதுகாவலர்களைக் கடந்து அத்துமீறி ஓடுதள பாதை நோக்கி ஓடியுள்ளார்.

அதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்த ஊழியர்கள் அத்துமீறி ஓடிய ஹனாவை தடுத்து நிறுத்தியுள்ளனர். விமானம் கிளம்புவதற்கு முன்பு ஹானாவின் பெயரை பல முறை அறிவித்துள்ளனர்.  

ஆனால் உரிய நேரத்திற்கு ஹானாவால் விமான நிலையத்திற்கு வந்து சேர முடியவில்லை அதனால் தான், விமானம் புறப்படுவதற்கு 10 நிமிடங்கள் இருக்கும் நிலையில் விமானத்தை எப்படியாவது பிடித்துவிடவேண்டும் என நினைத்து ஓடுதள பாதை நோக்கி ஓடியுள்ளார்.

இதனையடுத்து பதற்றமடைந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரை விமானத்திற்கு அருகே சென்றுவிடாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.


Advertisement