உலகம் Covid-19

சீனாவின் பித்தலாட்டம் ஒரே இரவில் அம்பலம்..! கொரோனா பலி எண்ணிக்கையை 50% உயர்த்தி வெளியான அறிவிப்பு..!

Summary:

Wuhan death toll revised up 50 percent in China

சீனாவில் கொரோனோவால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கையை ஒரே நாளில் 50 % அளவுக்கு உயர்த்தி திடீர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது சீனா. இந்த அறிவிப்பு பலரையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது.

சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பேரிழப்புகளை ஏற்படுத்திவருகிறது. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் கூட கொரோனாவால் சிக்கி தவிக்கின்றது. உலகளவில் இதுவரை 21 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 146,897 பேர் உயிர் இழந்துள்ளனர்.

ஆனால், வைரஸ் உருவானதாக கூறப்படும் சீனாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை உலக நாடுகளிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனா மக்கள் உட்பட பல்வேறு உலக நாடுகளும் சீனா உண்மையான இறப்பு எண்ணிக்கையை மறைப்பதாக குற்றம்சாட்டப்பட்டுவருகிறது.

அந்நாட்டில் 82341 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்றும் நேற்றுவரை 3342 பேர் பலியாகி இருப்பதாகவும் சீனா தெரிவித்தது. ஆனால், நேற்று இரவு ஒரே நாளில் சுமார் 1290 பேர் கூடுதலாக இறந்திருப்பதாக சீனா கூறியுள்ளது. வைரஸ் உருவானதாக கூறப்படும் உஹான் நகரில் மட்டும் இறந்தவர்களின் எண்ணிக்கையை 50 % உயர்த்தி பலி எண்ணிக்கை 4632 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

சிலரின் இறப்பு தற்போதுதான் தெரியவந்துள்ளது, மருத்துவமனைகள் சில இப்போதுதான் மரணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டது, வீடுகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை இப்போதுதான் கிடைத்தது. இப்படி பல காரணங்களை கூறி சீனா அந்நாட்டின் இறப்பு எண்ணிக்கையை ஒரே நாளில் அதிகரித்துள்ளது.


Advertisement