111 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் கலந்து கொண்ட 2019 ஆம் ஆண்டு உலக அழகிப் போட்டி! இந்திய அழகி மூன்றாமிடம்!

111 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் கலந்து கொண்ட 2019 ஆம் ஆண்டு உலக அழகிப் போட்டி! இந்திய அழகி மூன்றாமிடம்!



World beauty competition

உலக அழகிப் பட்டத்தை ஜமைக்காவைச் சேர்ந்த இளம்பெண் டோனி ஆன்சிங் வென்றுள்ளார். இந்திய அழகி சுமன்ராவ் மூன்றாம் இடத்தை கைப்பற்றினர்.

2019 ஆம் ஆண்டிற்கான  உலக அழகிப் பட்டத்தை ஜமைக்காவைச் சேர்ந்த இளம்பெண் டோனி ஆன்சிங் வென்றுள்ளார். இந்தியாவைச் சேர்ந்த சுமன் ராவ் மூன்றாவது இடத்தைக் கைப்பற்றியுள்ளார்.

69-வது உலக அழகிப் போட்டி கிழக்கு லண்டனில் துவங்கியது. இதில் மொத்தம் 111 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் கலந்து கொண்டனர். பல்வேறு போட்டிகளுக்குப் பின் 40 பேர் வரிசைப்படுத்தப்பட்டனர். இதில் ஜமைக்கா, பிரான்ஸ், இந்தியா, பிரேசில், நைஜீரியா அழகிகள் இறுதிச் சுற்றுக்கு தகுதிபெற்றனர்.

Suman rao

இறுதிச் சுற்றில் ஜமைக்கா நாட்டின் அழகி டோனி ஆன்சிங் உலக அழகியாக தேர்வுசெய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். டோனி, தற்போது அமெரிக்காவின் புளோரிடா பல்கலைக் கழகத்தில் படித்து வருகிறார்.

பிரான்சின் ஓபெலி மெசினா இரண்டாம் இடத்தையும், இந்திய அழகி சுமன்ராவ் மூன்றாம் இடத்தையும் கைப்பற்றினர். முதன்முறையாக சுமன் ராவ் 3-வது இடத்திற்கு தேர்வாகி உள்ளார். அவருக்கு மிஸ் வேர்ல்ட் ஆசியா 2019 என முடிசூட்டப்பட்டது. கடந்த 2018 ஆம் ஆண்டில் மிஸ் நவிமும்பை போட்டியில் சுமன்ராவ் பங்கேற்று 2-வது இடம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.