ஷாக்கிங்.!! மறந்தும் பிரஷர் குக்கரில் வைத்து சமைக்க கூடாத உணவுகள்.!!

ஷாக்கிங்.!! மறந்தும் பிரஷர் குக்கரில் வைத்து சமைக்க கூடாத உணவுகள்.!!



dont-cook-these-foods-in-pressure-cooker

இந்த பரபரப்பான உலகத்தில் பிரஷர் குக்கர் சமையலறையில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. சாதாரண கடாயில் நாம் சமைப்பதை விட குக்கரில் நிமிஷத்தில் சமைத்து முடித்து விடலாம். எல்லாருடைய வீட்டிலும் கண்டிப்பாக இந்த பிரஷர் குக்கர் இருக்கும் ‌. நீராவியின் அழுத்தத்தை பயன்படுத்தி சமைக்கின்ற இந்த பிரஷர் குக்கரில் சமையல் மிகவும் எளிதாகி விடுகிறது.
ஆனால் ஆய்வின்படி அனைத்து பொருட்களையும் பிரஷர் குக்கரில் சமைப்பது நல்லது கிடையாது. மாவு பொருட்களை குக்கரில் சமைக்கும் போது அக்ரிலாமைடு என்ற தீங்கு விளைவிக்கக்கூடியது. இது மலட்டுத்தன்மை புற்றுநோய் மற்றும் எண்ணற்ற பிரச்சனைகளை உருவாக்கும். ஒரு சில உணவுகளை நாம் குக்கரில் கண்டிப்பாக சமைக்கவே கூடாது அந்த உணவுப் பொருட்களை பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.

கீரை வகைகள்: கீரைகளை கடாயில் வைத்து வேக வைப்பது விட குக்கரில் மிகவும் விரைவாக சமைத்து விடலாம். அதனால் கீரைகளை சமைப்பதற்கு நாம் குக்கரை பயன்படுத்துவோம் ஆனால் கீரைகள் நாம் சமைக்கும் போது மிருதுவானதாக மாறிவிடும். அது நம் உடம்பிற்கு நல்லது கிடையாது. எனவே கீரைகளை குக்கரில் சமைக்க கூடாது.

இனிப்புகள்: பழங்களை வைத்து செய்யக்கூடிய இனிப்புகள், மற்ற இனிப்பு பொருட்களான கேசரி, பாயாசம் போன்றவை கண்டிப்பாக பிரஷர் குக்கரில் செய்யக்கூடாது. பேக்கிங் சம்பந்தமான உணவு பொருட்களையும் இதில் செய்யக் கூடாது.

health tipsபழம்: பழங்கள் பிறந்த குழந்தைக்கு சாப்பாடு கொடுக்க துவங்கியதிலிருந்து அந்த குழந்தைகளுக்கு பழங்களை குக்கரில் வைத்து மிகவும் மென்மையாக கொடுப்போம் ஆனால் அதன் மென்மை தன்மை பழத்தின் சத்துக்களையும் இழக்க செய்யும் எனவே பழத்தின் அனைத்து சத்துக்களும் குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டும் என்றால் அப்படியே கொடுப்பது நல்லது.

health tipsபால் பொருட்கள்: பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களான தயிர் மோர்‌ பன்னீர் போன்றவைகளை குக்கரில் சமைக்க கூடாது. அவ்வாறு சமைப்பது அதனுடைய தன்மையையும் சுவையையும் இழக்க செய்யும். 

பாஸ்தா: பொழுதெல்லாம் குழந்தைகள் பாஸ்தா மேகி போன்ற விரைவு உணவுகளை ஏன் விரும்புகிறார்கள் இதனை சாதாரணமாகவே நாம் சாப்பிடுவது உடம்பிற்கு நல்லது கிடையாது. அதிலும் குக்கரில் சமைத்து சாப்பிடுவது இதனுடைய சீரான தன்மையை இழக்க செய்து உடலுக்கு தீங்கு விளைவிக்கும். எனவே பாஸ்தாவை செய்யும் பொழுது கடாயை பயன்படுத்தி சமைப்பது நல்லது.