உலகம்

வாவ்..!! ஒருத்தருக்கு இப்படி கூடவா அதிர்ஷ்டம் அடிக்கும்..!! சாப்பாட்டிற்கு வாங்கிய நத்தையால் கோடீஸ்வரியாக மாறிய பெண்..

Summary:

தாய்லாந்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு அதிர்ஷ்டவசமாக கோடி ரூபாய் மதிப்பு கொண்ட அரியவகை முத்து

தாய்லாந்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு அதிர்ஷ்டவசமாக கோடி ரூபாய் மதிப்பு கொண்ட அரியவகை முத்து கிடைத்துள்ள சம்பவம் வைரலாகிவருகிறது.

பொதுவாக அதிர்ஷ்டம் என்பது எப்போது, எப்படி, யாருக்கு கிடைக்கும் என்றே சொல்ல முடியாது. அந்த வகையில் வீட்டில் சாப்பாடு செய்வதற்காக வாங்கிவந்த கடல் நத்தை மூலம் தாய்லாந்தை சேர்ந்த பெண் ஒருவர் கோடீஸ்வரியாக மாறியுள்ளார்.

ஆம், தாய்லாந்து நாட்டை சேர்ந்த ஏழ்மையான் பெண் ஒருவர் தனது வீட்டில் சமைப்பதற்காக அருகில் உள்ள மீன் மார்க்கெட்டில் இருந்து சில கடல் நத்தைகளை வாங்கிவந்துள்ளார். வாங்கி வந்த நத்தைகளை இரண்டாக உடைத்து, சுத்தம் செய்தபோது ஒரு கதையில் இருந்து ஆரஞ்சு நிறத்தில் சிறிய கல் போன்ற ஒன்று இருப்பதை கண்டுள்ளார்.

முதலில் அது ஏதோ கல் என்ன நினைத்த அவருக்கு, பிறகுதான் தெரியவந்துள்ளது அது மெலோ முத்து என்று. அதனை எடை போட்டு பார்த்தபோது சுமார் 6 கிராம் எடை இருந்துள்ளது. மெலோ முத்தானது மிகவும் அரியவகை என்பதால், அதன் விலை கோடி ரூபாய்க்கும் மேல் செல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.

வறுமையில் வாடிவந்த அந்த குடும்பம் தற்போது ஒரே நாளில் கோடீஸ்வரர்களாக மாறியிருப்பது உலகம் முழுவதும் வைரலாகிவருகிறது.


Advertisement