உலகம் லைப் ஸ்டைல்

இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. மஞ்சள் கலந்து முகத்தில் தேய்துவந்த பெண்.. கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி..

Summary:

மஞ்சளை கொண்டு தினமும் பேஸ்மாஸ்க் போட்டுவந்த இளம் பெண்ணின் முகம் மஞ்சளாக மாறிய சம்பவம் அதிர

மஞ்சளை கொண்டு தினமும் பேஸ்மாஸ்க் போட்டுவந்த இளம் பெண்ணின் முகம் மஞ்சளாக மாறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்காட்லாந்து நாட்டை சேர்ந்தவர் டிக் டாக் பிரபலமான Lauren Rennie. தனது டிக் டாக் பக்கம் மூலம் பல்வேறு ட்ரெண்டிங் வீடியோக்களை பதிவிட்டுவரும் இவர் சமீபத்தில் தனது முகம் மஞ்சளாக மாறிய வீடியோ காட்சி ஒன்றினை வெளியிட்டுள்ளார். மேலும் அதற்கான காரணம் குறித்தும் அவர் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

தனது முகத்தில் உள்ள வெடிப்பு, முகப்பரு ஆகியவற்றை போகவும், தனது முகம் கோல்டன் நிறத்தில் பளீச்சென்று காட்சியளிக்கவும், மஞ்சள், தேன், பாதாம் எண்ணெய், கடலை மாவு, பிரஸ் கிரீம் உள்ளிட்டவற்றை கலந்து, அதனை பேஸ்ட்போல் மாற்றி தினமும் முகத்தில் தேய்த்து வந்துள்ளார்.

இதனால் அவரது முகம் நாளடைவில் மஞ்சள் நிறத்தில் மாறியுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், என் முகப்பரு, சுருக்கங்கள், தோல் எரிச்சல் ஆகியவை நீங்கிவிட்டது. ஆனால் எனது முகம் மஞ்சள் நிறமாக மாறிவிட்டது எனவும், அந்த மங்கள் நிறம் தனது முகத்தில் இருந்து முற்றிலும் மறைய 3 வார காலம் ஆகிவிட்டது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் தனது முகம் மஞ்சள் நிறத்தில் மாறிய புகைப்படங்களிலும் அவர் டிக் டாக்கில் வெளியிட்டுள்ளார்.


Advertisement