வாக்கிங் சென்ற பெண் ஒரே ஒரு வாந்தியால் கோடீஸ்வரியாக மாறிய சம்பவம்.. இதுக்கு பேருதான் அதிர்ஷ்டமோ..!

வாக்கிங் சென்ற பெண் ஒரே ஒரு வாந்தியால் கோடீஸ்வரியாக மாறிய சம்பவம்.. இதுக்கு பேருதான் அதிர்ஷ்டமோ..!women-became-milliner-for-whale-vomit

திமிங்கிலத்தின் வாந்தியால் பெண் ஒருவர் கோடீஸ்வரியாக மாறியுள்ள சம்பவம் தாய்லாந்தில் நடந்துள்ளது.

பொதுவாக அதிர்ஷ்டம் என்பது எப்போது யாருக்கு கிடைக்கும் என்பதே சொல்ல முடியாது. கொடுக்குற தெய்வம் கூரையை பிய்த்துக்கொண்டு கொடுக்கும் என்பார்கள். அந்தவகையில் கடற்கரை ஓரமாக வாக்கிங் சென்ற பெண் ஒருவர் கோடீஸ்வரியாக மாறியுள்ளார்.

ஆம், தாய்லாந்தில் உள்ள நகோன் சி தம்மாரத் எனும் மாகாணத்தில் கடற்கரைக்கு அருகிலேயே வசித்து வருகிறார் சிரிபோர்ன் நியாம்ரின் எனும் பெண்மணி (49). இவர் தினமும் தனது வீட்டிற்கு அருகே இருக்கும் கடற்கரை ஓரமாக நடைப்பயிற்சி மேற்கொள்வது வழக்கம்.

Viral News

அந்த வகையில் கடந்த 23 ஆம் தேதி வாக்கிங் சென்ற சிரிபோர்ன் கடற்கரையில் கிடந்த வெள்ளை நிறத்தில் ஒரு பொருளை பார்த்து இருக்கிறார். அதன் அருகில் சென்று பார்த்தபோது அது என்ன என்பது அவருக்கு தெரியவில்லை. ஆனால் அந்த பொருள் மீது இருந்த ஆர்வத்தில் அவர் அந்த பொருளை தனது வீட்டிற்கு எடுத்துச்சென்றுள்ளார்.

பின்னர் அந்த பொருளை அக்கம் பக்கத்தினரிடம் காட்டி விசாரித்தபோதுதான் அது திமிங்கிலத்தின் வாந்தி என்பது அவருக்கு தெரியவந்துள்ளது. பொதுவாக திமிங்கலங்கள் தாங்கள் உட்கொண்ட உணவு செரிக்காமல் வாந்தி எடுக்கும்போது, அந்த வாந்தியுடன் சேர்ந்து வெள்ளை நிறத்தில் திரவத்தை வெளியேற்றுகிறது.

அந்த திரவம் கட்டியான உடன் அம்பெர்கிரிஸ் என அழைக்கப்படுகிறது. இதனை கொண்டு உலகின் மிக விலை உயர்ந்த வாசனை திரவியம் தயாரிக்க பயன்படுகிறதாம். இந்நிலையில் சிரிபோர்ன் கண்டெடுத்த 7 கிலோ எடைக் கொண்ட அந்த அம்பெர்கிரிஸ் மட்டும் இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 2 கோடிக்கு விலைபோகும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.

இதனால் அந்த பெண் தற்போது கோடீஸ்வரியாக மாறியுள்ளார். இந்த சம்பவம் தற்போது உலகம் முழுவதும் வைரலாகிவருகிறது.