உலகம் லைப் ஸ்டைல்

வைரல் வீடியோ: தரையிறங்கிய விமானத்தின் அவசரகால கதவை திறந்து விமானத்தின் இறக்கையில் அமர்ந்த பெண்.! அதிர்ச்சி சம்பவம்.!

Summary:

Woman Walks Onto Airplane Wing After Complaining She is Too Hot

விமானத்தின் உள்ளே காற்று வரவில்லை, எனக்கு ஒரே புழுக்கமாக இருப்பதாக கூறி பெண் ஒருவர் ஓடுபாதையில் தரை இறங்கி கொண்டிருந்த விமானத்தின் அவசர கால ஜன்னல் வழியாக வெளியேறி விமானத்தின் இறக்கையில் அமர்ந்திருந்த சம்பவம் துருக்கி நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

பெண் ஒருவர் தனது 2 குழந்தைகளுடன் விமானத்தில் பயணம் செய்த நிலையில் அவர் பயணம் செய்த விமானம் தரையிறங்குவதற்கு தயாராகி ஓடுபாதையில் சென்றுகொண்டிருந்தது, பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து தரையிறங்குவதற்கு தயாராக இருந்த நிலையில் இந்தப் பெண் மட்டும் தனக்கு ஒரே புழுக்கமாக இருப்பதாக கூறி விமானத்தின் அவசர கால கதவைத்திறந்து விமானத்தின் இறக்கையில் சென்று அமர்ந்துள்ளார். 

ஒரு வழியாக விமானம் தரை இறங்கி கீழே நின்றபிறகு அந்தப் பெண் விமானத்தின் இறக்கையில் இருந்து எழுந்து மீண்டும் விமானத்திற்குள் சென்றுள்ளார். பெண்ணின் இந்த செயலை பார்த்த விமானத்துக்குள் இருந்த சக பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்ததோடு இதை சிலர் வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர். 

இதனையடுத்து அந்தப் பெண் விமானத்தில் இருந்து இறங்கி கீழே சென்றபோது அங்கு தயாராக இருந்த ஏர்போர்ட் அதிகாரிகள் பெண்ணை கைது செய்தனர். மேலும் அந்த பெண் அந்நாட்டு வழியாக போகும் எந்த ஒரு விமானத்திலும் பயணம் செய்ய கூடாது என அந்தப் பெண்ணிற்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

விமானத்தின் அவசர கால ஜன்னல் வழியாக விமானத்தில் இருந்து வெளியேறி இருக்கையில் அமர்ந்திருந்த அந்த பெண்ணால் அந்த பகுதி மட்டும் இல்லாமல் அந்த நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.


Advertisement