உலகம் மருத்துவம் லைப் ஸ்டைல்

4 வருஷமா புரட்டி எடுத்த வயிற்றுவலி! 21 வயது இளம் பெண்ணின் வயிற்றை ஸ்கேன் செய்த மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி.

Summary:

வயிறு வலியால் அவதிப்படுவந்த 21 வயது இளம் பெண் ஒருவரின் வயிற்றில் இருந்து மிகப்பெரிய கட்டி ஒன்று அகற்றப்பட்டுள்ள சம்பவம் இங்கிலாந்தில் நடந்துள்ளது.

வயிறு வலியால் அவதிப்படுவந்த 21 வயது இளம் பெண் ஒருவரின் வயிற்றில் இருந்து மிகப்பெரிய கட்டி ஒன்று அகற்றப்பட்டுள்ள சம்பவம் இங்கிலாந்தில் நடந்துள்ளது.

இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் 21 வயதாகும் மேடலின் ஜோன்ஸ். இவருக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக கடுமையான வயிற்று வலி இருந்துள்ளது. மலசிக்கல் அல்லது மாதவிடாயின் போது வரும் வலியாக இருக்கலாம் என நினைத்து மேடலின் அந்த வலியை சாதாரணமாக விட்டுவிட்டார்.

மேலும் வயிறு வலி வரும் போது சில மாத்திரைகளை உட்கொண்டு நாட்களை கடத்திவந்துள்ளார். இந்நிலையில் மேடலின் வயிறு வீங்கி வலி மிகவும் அதிகமானநிலையில் அவர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரது வயிற்றில் ஸ்கேன் செய்து பார்த்தபோது அவரது கர்ப்பப்பையில் மிகப்பெரிய இரத்த கட்டி ஒன்று வெடிக்கும் தருவாயில் இருந்துள்ளது.

உடனே அவரை மருத்துவமனையில் அனுமதித்து அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அவரது கருப்பையில் இருந்த இரத்த கட்டி அகற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள மருத்துவர்கள், அவர் இன்னும் சில காலம் தாமதித்திருந்தால் அந்த கட்டி அவரது வயிற்றுக்குள்ளையே வெடித்து, அவரது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தியிருக்கும், மாதவிடாயின் போது வெளியேறும் இரத்தம் சரியாக வெளியேறாமல் இப்படி கட்டியாக உருவாகி இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இதுகுறித்து பேசியுள்ள மேடலின், சிறுவயதில் இருந்தே எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் மருத்துவமனைக்கு செல்லக்கூடாது என தான் நினைத்திருந்ததே இந்த பிரச்சனை இவ்வளவு தூரத்திற்கு வர காரணம். நான் ஆரம்பத்திலையே மருத்துவர்களை சந்தித்திருந்தால் இந்த பிரச்சனை இவ்வளவு தூரம் வந்திருக்காது. மேலும், இந்த பிரச்சனை காரணமாக எனது ஒரு கிட்னியும் செயலிழந்ததால் மருத்துவர்கள் அந்த கிட்னியையும் நீக்கிவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனவே உடலில் ஏற்படும் மாற்றங்களை கண்டுகொள்ளாமலும், அலட்சியம் காட்டாமலும், உடனே அதுகுறித்து மருத்துவர்களை கலந்து ஆலோசித்து, அதற்கான தீர்வை பெறுங்கள் என அறிவுரையும் கூறியுள்ளார் மேடலின்.


Advertisement