உலகம்

இதற்கொல்லாமா விவாகரத்து பெறுவது.. சின்ன விஷயம்தானே என்று நினைத்தால் இப்படி ஆச்சே..

Summary:

Wife gave divorce to husband because very small misunderstanding

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தை சேர்ந்த மேத்திவ்ஸ். இவர் ஒரு பெண்ணை காதலித்து 13 வருடங்களுக்கு முன்பு  திருமணம் செய்து கொண்டார். 13 வருட குடும்ப வாழ்க்கை சந்தோசமாக சென்று கொண்டிருந்த நிலையில் ஒரு சிறிய மனக்கசப்பு அவர்களை விவாகரத்து வரை கொண்டு சென்று விட்டது. 

அதாவது மேத்திவ்ஸ் சாப்பிட்டு விட்டு டைனிங் டேபிளில் உள்ள தட்டு, டம்ளர் உள்ளிட்ட பொருட்களை முறையாக எடுத்து வைக்காமல் சென்றதற்காகவும், வீட்டில் பொருட்களை எடுத்த இடத்தில் வைக்காமல் சென்றதற்காகவும் மேத்திவ்ஸ் மனைவி அடிக்கடி மேத்திவ்ஸிடம் சண்டையிட்டு வந்துள்ளது. 

ஒரு கட்டத்தில் பெருமை இழந்த மேத்திவ்ஸ் மனைவி தனக்கு விவகாரத்து வேண்டும் என்று விவகாரத்து பெற்று சென்றுள்ளார். இந்நிலையில் இச்சம்பவம் குறித்து மேத்திவ்ஸ் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். 

இதனை பார்த்த பல ஆண்கள் மற்றும் பெண்கள் தங்களது திருமண வாழ்வை காப்பாற்றியதற்கு நன்றி என கூறியுள்ளனர். மேலும் ஒரு சிலர் மேத்திவ்ஸை ஆண் ஆதிக்கம் பிடித்தவர் எனவும் கமெண்ட் செய்திருந்ததாகவும் கூறியுள்ளார். 


Advertisement