BREAKING: ஷாக் நியூஷ்! தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரபல தமிழ் காமெடி நடிகருக்கு மாரடைப்பு!!!
அண்டர்வாட்டர் போட்டோஷூட்டில் நடந்த அதிர்ச்சி! தோளில் தட்டிய திமிங்கலச் சுறா.... . உறைய வைக்கும் வீடியோ!!!
பிலிப்பைன்ஸ் கடல்பகுதியில் நடந்த ஒரு அண்டர்வாட்டர் போட்டோஷூட், எதிர்பாராத திருப்பத்தால் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. போட்டோஷூட்டில் ஈடுபட்டிருந்த இளம்பெண்ணுக்கு அருகே திடீரென வந்த ராட்சத மீன் காட்சி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. வீடியோ வெளியாகிய சில மணி நேரங்களிலேயே இது வைரலாகியுள்ளது.
அருகில் வந்த ராட்சத விருந்தினர்
மௌரின் காலகோ என்ற இளம்பெண் ஆழ்கடலில் கேமராவுக்கு போஸ் கொடுத்து கொண்டிருந்தபோது, உலகின் மிகப்பெரிய மீன் இனங்களில் ஒன்றான திமிங்கலச் சுறா திடீரென அருகில் வந்தது. எதையும் உணரும் முன்பே, அந்த சுறா தனது வாயால் அவரது கையில் மெதுவாக ஒரு தொடுதலை ஏற்படுத்தியது. இந்த தருணம் முழுவதும் கேமராவில் பதிவாகியுள்ளது.
பதற்றமில்லா செயலால் பாராட்டு
இப்படிப்பட்ட சூழலில் யாரும் பதற்றமடைவது சாதாரணம். ஆனால் மௌரின் அமைதியாக நடந்து கொண்டார். சுறாவை எவ்விதத்திலும் தொந்தரவு செய்யாமல், மெதுவாக மேல்நோக்கி நீந்திச் சென்றார். அவரது இந்த நிதானமான அணுகுமுறை பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது. விலங்குகளின் வாழ்விடத்தில் மனிதர்கள் விருந்தினர்கள் என்பதை இந்த சம்பவம் நினைவூட்டுவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: நடந்தது என்ன? தலையை சொறிந்ததால் கைதான பெண்? வைரலாகும் வீடியோ!
நெட்டிசன்களின் சுவாரஸ்ய ரியாக்ஷன்
இந்த வைரல் வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் சுவாரஸ்யமான கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். “சுறா வந்து ‘சைடுல போங்க, என் போட்டோ கெட்டுப்போகுது’ என்று சொல்லும் மாதிரி இருக்கு” என சிலர் நகைச்சுவையாக பதிவிட்டுள்ளனர். அதே நேரத்தில், கடல் உயிரினங்களின் இயல்பான நடத்தை குறித்து விழிப்புணர்வும் இந்த வீடியோ மூலம் அதிகரித்துள்ளது.
A woman in the Philippines was left stunned when a giant whale shark quietly swam up behind her and nudged her arm during an underwater photo shoot. pic.twitter.com/RyjNg1tXH0
— wR (@WeReporter) April 20, 2026
இதையும் படிங்க: அய்யோ...பார்க்கும்போதே பக்கு பக்குன்னு இருக்குதே! 5-வது மாடியிலிருந்து தவறி கீழே விழுந்த குழந்தை! நொடியில் வந்த கடவுள்....வைரலாகும் வீடியோ!!!