ஒரே தள்ளுதான்.. அந்த கரடியே ஒரு நிமிஷம் மிரண்டு போச்சு!! நாய்களை காப்பாற்ற சிறுமி செய்த காரியம்.. வைரல் வீடியோ..
17 வயது சிறுமி ஒருவர் கரடியுடன் சண்டையிட்டு நாய்களை காப்பாற்றும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள வீடு ஒன்றின் அருகில் கரடி ஒன்று அங்கிருந்த சுவரின் மீது நடந்து சென்றுள்ளது. கரடியை பார்த்த அங்கிருந்த நாய்கள் சில விபரீதம் புரியாமல் அந்த கரடியின் அருகே சென்று குரைத்துள்ளது. இதனால் மிரண்டுபோன கரடி நாய்களை தாக்க முற்படுகிறது.

இந்நிலையில் அங்கு வேகமாக ஓடிவந்த 17 வயது சிறுமி ஒருவர், எதிரே இருப்பது கரடி என்றும் கூட யோசிக்காமல் அந்த கரடியை ஒரே தள்ளாக சுவரில் இருந்து தள்ளவிட்டு அங்கிருந்து தனது செல்லப்பிராணிகளை தூக்கிக்கொண்டு தப்பிக்கிறார். இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியிருந்தநிலையில் தற்போது இந்த காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது.
தனது செல்ல பிராணிகளை காப்பாற்றுவதற்காக கரடி என்றுகூட பார்க்காமல் துணிச்சலாக செயல்பட்ட அந்த சிறுமிக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்துவருகின்றனர்.
This is crazy af omg pic.twitter.com/Sh14yVD9Eu
— Bria Celest (@55mmbae) June 1, 2021