அபுதாபியில் டிரோன் தாக்குதல்.. 2 இந்தியர்கள் உட்பட 3 பேர் மரணம்.! 

அபுதாபியில் டிரோன் தாக்குதல்.. 2 இந்தியர்கள் உட்பட 3 பேர் மரணம்.! 


United Arab Emirates Abu Dhabi Drone Attack 2 Indian and 1 Pakistani Died Attacks done by Houthi Gang

ஏமன் நாட்டில் அரசு படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியினருக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடைபெற்று வருகிறது. ஏமன் அரசு படைகளுக்கு சவூதி அரேபிய அரசு உதவி செய்து வருகிறது. இருநாட்டு கூட்டுப்படைகளும் இணைந்து ஹவுதி கிளர்ச்சியாளர்களை ஒழிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், இன்று ஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபுதாபியில் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அபுதாபி சர்வதேச விமான நிலையம் மற்றும் அதற்கு அருகே உள்ள எண்ணெய் நிறுவனத்தில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. 

இந்த தாக்குதலில், எண்ணெய் டேங்கர் வெடித்து சிதறி 2 இந்தியர்கள் மற்றும் 1 பாகிஸ்தானியர் உயிரிழந்துள்ளதாகவும், 6 பேர் படுகாயம் அடைந்து இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த இந்தியர் மற்றும் பாகிஸ்தானியர் குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இந்த தாக்குதலுக்கு ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்று உள்ளனர்.