உலகம்

பொருளாதார வீழ்ச்சி, பட்டினி சாவு என மரண விளிம்பில் ஆப்கானிய மக்கள் - ஐ.நா உலகநாடுகளுக்கு வேண்டுகோள்..!

Summary:

பொருளாதார வீழ்ச்சி, பட்டினி சாவு என மரண விளிம்பில் ஆப்கானிய மக்கள் - ஐ.நா உலகநாடுகளுக்கு வேண்டுகோள்..!

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் ஆட்சி நடந்து வரும் நிலையில், ஆப்கானின் தற்போதைய நிலவரம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார். 

அவர் பேசுகையில், "அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளின் விலகளுக்கு பின்னர், 20 வருடம் கழித்து தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றியுள்ளனர். ஆப்கானிஸ்தானின் பொருளாதாரம் ஏற்கனவே தடுமாறிக்கொண்டு இருந்த நிலையில், சர்வதேச சமூகம் ஆப்கானிஸ்தானின் வெளிநாடு சொத்துக்களை முடக்கி இருக்கிறது. பொருளாதார ஆதரவையும் நிறுத்தி, தாலிபான்களுடன் இணைந்து பணியாற்ற விருப்பமில்லை என்பதை உறுதி செய்துள்ளது.

அதனால் பொருளாதாரத்தை காப்பாற்றும் பொருட்டு பணம் பயன்படுத்தும் செயலை தடுக்க விதிகள் மற்றும் நிபந்தனைகள் அவசர சூழலில் நிறுத்தப்பட வேண்டும். உலகளவில் பெரும் நிதி அமைப்பாக டாலர் இருப்பதால், அதற்கு முக்கிய பங்கு அமெரிக்காவுக்கு உள்ளது. அமெரிக்காவில் உள்ள ஆப்கானிய வெளிநாட்டு இருப்பு தொகையான 7 பில்லியன் டாலரை அமெரிக்கா முடக்கி இருக்கிறது. ஆப்கானிஸ்தானின் பொருளாதாரத்தில் பணப்புழக்கம் மீட்பது முக்கியமாக ஆகியுள்ளது.

பசி, பட்டினியால் உயிரிழக்கும் ஆப்கான் மக்களை காப்பாற்ற 5 பில்லியன் அமெரிக்க டாலர் நிதிஉதவி வழங்க வேண்டும். ஆப்கானியர்கள் தற்போதைய சூழ்நிலையில் மரணத்தின் விளிம்பில் இருக்கிறார்கள். 8.7 மில்லியன் ஆப்கானிய மக்கள் பசியால் வாடி வருகிறார்கள். மருத்துவர்கள், துப்புரவு பணியாளர்கள், பொறியாளர்கள் மற்றும் பிற அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க சர்வதேச நிதி அனுமதி செய்யப்பட வேண்டும். ஆப்கானிய மக்களுக்கு ஆதரவளிக்க சர்வதேச சமூகத்திற்கு நான் வேண்டுகோள் வைக்கிறேன். அதனைப்போல, அடிப்படை மனித உரிமையை அங்கீகாரம் செய்து பாதுகாக்கவும், பெண்கள் உரிமையை பாதுகாக்கவும் தலிபான் தலைவர்களுக்கு வேண்டுகோள் வைக்கிறேன்" என்று தெரிவித்தார். 


Advertisement