வாட்ஸாப்பில் முட்டாள் என கூறியதால் 6 மாதம் சிறை, 4 லட்சம் அபராதம்!

வாட்ஸாப்பில் முட்டாள் என கூறியதால் 6 மாதம் சிறை, 4 லட்சம் அபராதம்!


uae man calls lover as idiot on whatsapp court fined rs 4 lakhs

Technology வளர்ச்சிக்கேற்ப நாளுக்கு நாள் தொலைபேசி பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. தொலைபேசியை பயன்படுத்தாதவர்களின்  எண்ணிக்கை எடுத்துக்கொண்டால் மிகவும் குறைவு என்றே கூறலாம். முப்பெல்லாம் ஊருக்கு ஒன்று அல்லது இரண்டு தொலைபேசி மட்டுமே இருக்கும். ஆனால் இன்று ஒவ்வொரு வீட்டிலும் மனிதர்களை விட தொலைபேசி எண்ணிக்கையே அதிகமாக உள்ளது.

அதிலும் குறிப்பாக இன்று whatsapp பயன்படுத்தாத நபர்கள் மிகவும் குறைவு. பொதுவாக வாட்ஸ் அப்பில் செய்திகள் அனுப்பும்போது நண்பர்களோ அல்லது காதலர்களோ விளையாட்டாக முட்டாள், லூசு என செல்லமாக அழைப்பதுண்டு.

Whatsapp

இந்நிலையில் தனது காதலர் தன்னை முட்டாள் என கூறியதால் அரேபிய பெண் ஒருவர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். அந்தப் பெண்ணின் காதலர் வாட்ஸப்பில் உரையாடும் பொழுது விளையாட்டாக ஹப்லா என்று கூறியுள்ளார். ஹப்லா என்றால் அரேபிய மொழியில் அறிவற்ற முட்டாள் என்பது பொருளாகும்.

முட்டாள், லூசு இதெல்லாம் நம் ஊரில் சாதாரண வார்த்தைகளாக இருந்தாலும் அரேபிய சட்டப்படி மற்றொருவரை அவமதிக்கும் வார்தைகள் கூட சைபர் கிரைம் குற்றமாக கருதப்படுகிறது.

இதனால் இதனால் இந்த வழக்கை விசாரித்த அரேபிய நீதிமன்றம் அந்த பெண்ணின் காதலருக்கு 60 நாட்கள் சிறை தண்டனையும், நான்கு லட்சம் அபராதமும் விதித்துள்ளது.