பைக் ஓட்டிக்கொண்டே சோப்பு போட்டு குளித்த இருவர்..! வைரலான வீடியோ..! அதன்பின் நடந்த சம்பவம்..!

பைக் ஓட்டிக்கொண்டே சோப்பு போட்டு குளித்த இருவர்..! வைரலான வீடியோ..! அதன்பின் நடந்த சம்பவம்..!



Two man bath while driving bike video goes viral

ஒரேநாளில் பிரபலமாகவேண்டும் என்ற பெயரில் சிலர் வித்தியாசமான செயல்களில் ஈடுபட்டு பலநேரங்களில் சிக்கலில் மாட்டிக்கொள்வது வழக்கம். அந்த வகையில் பைக் ஓட்டிக்கொண்டே குளிப்பதுபோல் இருவர் வீடியோ எடுத்து அதை சமூக வலைத்தளங்களில் வெளியிட, வீடியோ வைரலானதை அடுத்து தற்போது அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வியட்நாம் நாட்டை சேர்ந்த இவர்களில் ஒருவரது பெயர் Huynh Thanh Khanh. 23 வயதாகும் இவரும், பெயர் தெரியாத மற்றொரு நபரும் உடம்பில் சட்டை இல்லாமல் ஒருவர் வாகனம் ஓட்ட, மற்றொருவர் பின்னால் அமர்ந்துள்ளார். இருவருக்கும் இடையே ஒரு வாளியில் தண்ணீர் வைத்துக்கொண்டு பின்னால் அமர்ந்திருப்பார் இருவரது தலையிலும் சோப்பு போட்டு பின்னர் தண்ணீர் ஊற்றுகிறார்.

வாகனம் ஓட்டுபவர் தனது கால் இடுக்கில் பீர் பெட்டியை வைத்துக்கொண்டு வேகமாக இருசக்கர வாகனத்தை இயக்குகிறார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இந்த வீடீயோவை பார்த்த அதிகாரிகள், வாகன விதிமுறைகளை மீறி வாகனம் ஒட்டிய இருவருக்கும் அபராதம் விதித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.