உலகம்

தண்டவாளத்தில் பாய்ந்து வந்த ரயில் முன்பு பின்னோக்கி சென்ற கார்! பின் நடந்தது என்ன? வைரலாகும் பகீர் வீடியோ!!

Summary:

Train chases a car which reversed onto train tracks in Kentucky

அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்திலுள்ள La Grange என்ற பகுதியில், ரயில் தண்டவாளத்தை ஒட்டியபடியே கார் பார்க்கிங் அமைந்துள்ளது. அங்கு ஏராளமான கார்கள் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த தண்டவாளத்தில் ரயில் ஒன்று வந்துகொண்டிருந்தபோது, அங்கு பார்க்கிங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்று கிளப்பி பின்னோக்கி எடுக்கப்பட்டது. 

மேலும் கார் டிரைவர் ரயில் வந்து கொண்டிருப்பதை கவனிக்காமல் பின்நோக்கியே நகர்ந்து வந்துள்ளார். அப்பொழுது கார் ரயில் தண்டவாளத்தின் உள்ளேயே வந்து விடுகிறது. மேலும் கார் ரயிலின் முன்னே வருவதை கண்ட ரயில் இயக்குனர் ஹாரன் அடித்தும்,  ரயிலின் முன் பக்கத்தில் உள்ள விளக்குகளை எரிய செய்தும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதனை கண்டதும் கார் டிரைவர் பரபரப்பாக காரை பின்நோக்கி நகர்த்தியுள்ளார். பின்னர் குறிப்பிட்ட தூரம் வந்ததும் கார் டிரைவர் சாமர்த்தியமாக ரயில் பாதையில் இருந்து வெளியேறி,  எந்தவித அசம்பாவிதமும் நடக்காமல் தப்பிச் செல்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பலரையும் திகில் அடையச் செய்துள்ளது.


Advertisement