நகைப்பிரியர்களே.. குறைந்த விலையில் தங்கம் வாங்க வேண்டுமா?.. இந்த நாடுகளில் மலிவு.!
துபாய், ஹாங்காங்க், சுவிட்சர்லாந்து, சிங்கப்பூர் மற்றும் துருக்கியில் தங்கம் வாங்குவதன் மூலம் நாம் பணத்தை சேமிக்கலாம்.
தங்கம் வாங்கலாம்:
Gold Cheaper Than India: உலகில் தங்கம் விலை கடந்த சில மாதங்களில் மிகவும் உயர்ந்த நிலையில் உள்ளது. இதனால் தங்கம் எளிதில் வாங்க முடியாததாக பலருக்கு தோன்றுகிறது. சில நாடுகளில் இந்தியாவை விட குறைந்த விலையில் தங்கம் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நாடுகளில் துபாய், ஹாங்காங்க், சுவிட்சர்லாந்து, சிங்கப்பூர் மற்றும் துருக்கி அடங்கும். இவை அனைத்தும் தங்கம் வாங்க விரும்புபவர்களுக்கு அதிக சேமிப்பு வாய்ப்பை வழங்குகின்றன.
இதையும் படிங்க: நகைப்பிரியர்களுக்கு பேரிடி.. புதிய உச்சத்தில் தங்கம், வெள்ளி.. ரூ.90,000ஐ நெருங்குகிறது.!

துபாய் & ஹாங்காங் தங்கம்:
துபாயில் 10 கிராம் 22 காரட் தங்கம் 2,200 AEDக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்திய மதிப்பில் இது சுமார் ரூ.1,17,531 ஆகும். இதை இந்தியாவில் வாங்கினால் ரூ.1,44,200 செலவாகும். இதன் மூலம் ரூ.22,669 வரை சேமிக்க முடியும். ஹாங்காங்கில் 10 கிராம் தங்கம் 7,750 HKDக்கு விற்கப்படுவதால், இந்திய விலையை ஒப்பிடும் போது ரூ.42,700 சேமிக்க முடியும்.
ஸ்விசர்லாந்து & சிங்கப்பூர் தங்கம்:
சுவிட்சர்லாந்தில் 10 கிராம் தங்கம் 80 CHFக்கு விற்கப்படுகிறது. இந்திய மதிப்பில் இது ரூ.80,630 ஆகும். இதனால் இந்தியாவை விட ரூ.63,570 வரை சேமிக்கலாம். சிங்கப்பூரில் 10 கிராம் தங்கம் 145 SGDக்கு விற்பனை செய்யப்படுகிறது. இது இந்திய மதிப்பில் ரூ.98,300 ஆகும், ரூ.45,900 வரை சேமிப்பு கிடைக்கும். துருக்கியில் 10 கிராம் தங்கம் 4,050 TRYக்கு விற்கப்படுவதால் ரூ.43,600 வரை சேமிக்க முடியும்.

இந்தியாவுடன் வாங்கும் தங்கத்தை விட வெளிநாடுகளில் வாங்கும் தங்கத்தால் ரூ.20,000 முதல் ரூ.63,000 வரை சேமிக்கலாம் என்றாலும், அதனை இந்தியாவுக்குள் எடுத்து வர உரிய ஆவணம் / அனுமதி, அதற்கான வரிகள், பயண செலவுகள் ஆகியவற்றையும் திட்டமிடுவது நல்லது. அதுதொடர்பான தகவல் இதில் கொடுக்கப்படவில்லை என்பதால், ஆலோசகரிடம் அறிவுரை பெறவும்.