உலகம்

ஆட்சியை பிடித்த தாலிபன்கள்! அரசு பதவியேற்பு விழாவிற்க்கு எந்தெந்த நாடுகளுக்கு அழைப்பு பார்த்தீர்களா!!

Summary:

தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத அமைப்பான தாலிபன்கள் ஆட்சியை கைப்பற்றினர்.

தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத அமைப்பான தாலிபன்கள் ஆட்சியை கைப்பற்றினர்.கடந்த 20 வருடங்களாக நடந்து வந்த உள்நாட்டு போர் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

தாலிபான்களின் அதிகாரபூர்வ சமூக வலையதலங்களில் ,தாலிபான்கள் தலைமையில் புதிய அரசு விரைவில் பதவி ஏற்க உள்ளதாகவும்,பதவி ஏற்பு விழாவில் கலந்துக்கொள்ள பாகிஸ்தான்,கத்தார்,ஈரான்,துருக்கி,ரஷ்யா,சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு அழைப்பிதல் விடுவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து தாலிபான்களின் செய்தி தொடர்பாளரான ஸபிஹீல்லா முஜாஹித் அவரது தரப்பில் கூறியதாவது,நம் நாட்டின் மீது படையெடுத்து வந்தவர்கள் நம் நாட்டை மறு கட்டமைப்பு செய்யமாட்டார்கள்,இதனை மக்கள் தான் ஒன்றிணைந்து செய்து முடிக்க வேண்டும், என தெரிவித்தார்.

 

 


Advertisement