இன்ப அதிர்ச்சி கொடுக்கும் திமுக! நகைக்கடன், கல்விக்கடன் தள்ளுபடி! பெண்களின் தொழிலுக்கு ரூ. 10,000... திமுக தேர்தல் அறிக்கை லிஸ்ட் ரெடி.!!!



dmk-2026-assembly-election-manifesto-committee

2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி அரசியல் சூழல் மெல்ல சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், திமுக தனது தேர்தல் வியூஹங்களை திட்டமிட்ட முறையில் முன்னெடுத்து வருகிறது. மக்களைக் கவரும் வாக்குறுதிகள் அடங்கிய அறிக்கையை உருவாக்கும் பணிகள் தற்போது வேகமெடுத்துள்ளன.

தேர்தல் அறிக்கை குழு அறிவிப்பு

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக தனது தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவை அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தக் குழு, அனைத்துத் தரப்பு மக்களின் எதிர்பார்ப்புகளையும் உள்ளடக்கும் வகையில் அறிக்கையை வடிவமைக்கும் என கூறப்படுகிறது. திமுக தேர்தல் அறிக்கை அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

மகளிர் நலன் மையமாக்கும் வாக்குறுதிகள்

இந்தத் தேர்தலுக்கான முக்கிய வாக்குறுதிகளில், மகளிர் உரிமைத் தொகை உயர்வு மற்றும் பெண்கள் தொழில் தொடங்குவதற்காக ரூ.10,000 முன்வைப்புத் தொகை (Advance) வழங்கும் திட்டம் இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மகளிர் உரிமைத் தொகை தொடர்பான அறிவிப்பு பெண்கள் மத்தியில் கவனம் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: குஷியோ குஷி! தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000-ஆ..? அது எப்போ தெரியுமா?

கடன் தள்ளுபடி மற்றும் வேலைவாய்ப்பு

கல்விக்கடன் மற்றும் தங்க நகைக்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்புகள், காலிப் பணியிடங்களை நிரப்புதல், அரசு ஊழியர்களுக்கான முக்கிய சலுகைகள் ஆகியவையும் தேர்தல் அறிக்கையில் இடம் பெறலாம் என கூறப்படுகிறது. இவை இளைஞர்கள் மற்றும் நடுத்தர மக்களிடையே பெரும் வரவேற்பை பெறும் அம்சங்களாக கருதப்படுகின்றன.

விவசாயிகள் மற்றும் மின் கட்டண வாக்குறுதிகள்

விவசாயிகள் நலனை மையமாகக் கொண்ட அதிரடி அறிவிப்புகள் மற்றும் மின் கட்டணக் குறைப்பு தொடர்பான வாக்குறுதிகளும் சேர்க்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2026 சட்டமன்றத் தேர்தல் களத்தில், இத்தகைய பொருளாதார மற்றும் சமூக நலத் திட்டங்கள் முக்கிய பங்கு வகிக்கும் என அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அனைத்துத் தரப்பு மக்களையும் கவரும் வகையில் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் திமுகவின் தேர்தல் அறிக்கை தயாராகி வரும் நிலையில், தேர்தல் அரசியல் இப்போதே வேகமெடுத்து, எதிர்வரும் நாட்களில் அரசியல் களம் மேலும் பரபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதையும் படிங்க: 2026 தேர்தலில் அதிமுக- தவெக கூட்டணி..? அப்படியே அந்தர் பல்டி அடித்து சூசகமான பதிலால் புயலை கிளப்பிவிட்ட செங்கோட்டையன்! அதிரும் அரசியல் களம்!