கடலில் சிப்பிகளைப் பொறுக்க சென்ற மீனவருக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி.. ஒரே நாளில் கோடீஸ்வரனாக மாறிய சம்பவம்..

கடலில் சிப்பிகளைப் பொறுக்க சென்ற மீனவருக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி.. ஒரே நாளில் கோடீஸ்வரனாக மாறிய சம்பவம்..


thailand-man-found-costly-orange-color-muththu

தாய்லாந்து நாட்டை சேர்ந்த மீனவர் ஒருவருக்கு மிகவும் அரிதான ஆரஞ்சு நிற முத்து கிடைத்துள்ள சம்பவம் தற்போது வைரலாகிவருகிறது.

அதிர்ஷ்டம் என்பது எப்போது யாருக்கு அடிக்கும் என்று சொல்லவே முடியாது. அந்த வகையில் தாய்லாந்து நாட்டை சேர்ந்த மீனவர் ஒருவர் மீன்பிடி தொழில் செய்துவரும்நிலையில், கூடவே கடல் பகுதியில் சிப்பிகளைப் பொறுக்கி அதனை விற்று பிழைப்பு நடத்தி வந்துள்ளார்.

பெரிதாக வருமானம் இல்லாமல் தவித்துவந்த இவர், வழக்கம் போல் சிப்பிகளை பொறுக்க கடல் பகுதிக்கு சென்றுள்ளார். ஆனால் அவருக்கு அப்போது தெரியாது, அவருக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம் அடிக்க போகிறது என்று. ஆம், வழக்கம்போல் சிற்பிகளை பொறுக்கி விற்பனை செய்ய தொடங்கிய அவர், ஒரு சிற்பியை பிரித்தபோது அதில் ஆரஞ்சுநிற முத்து இருப்பதை பார்த்துள்ளார்.

அந்த ஆரஞ்சு நிற முத்து மிகவும் அரிதானது என அவருடன் இருந்த அவரது நண்பர் எடுத்து கூறவே, மறுநாள் அதனை எடை போட்டு பார்த்த போது அந்த முத்து கிட்டத்தட்ட 8 கிராம் எடை இருப்பது தெரியவந்தது. அதுமட்டும் இல்லாமல் அந்த முத்தின் மதிப்பு தற்போது இந்திய மதிப்பில் சுமார் இரண்டரை கோடி ரூபாய் வரை விலைபோகும் என எதிர்பார்க்கப்படுகிறது.