நெஞ்சை பதறவைக்கும் சோகம்..! இரவு விடுதியில் பயங்கர தீ விபத்து.. 13 பேர் உடல் கருகி பலி., 40 பேர் படுகாயம்..!

நெஞ்சை பதறவைக்கும் சோகம்..! இரவு விடுதியில் பயங்கர தீ விபத்து.. 13 பேர் உடல் கருகி பலி., 40 பேர் படுகாயம்..!


Thailand Fire Accident Night Hotel

தாய்லாந்து நாட்டில் உள்ள பாங்காங், சோன்புரி மாகாணத்தில் சத்தாஹிப் பகுதியில் இரவு விடுதி செயல்பட்டு வருகிறது. இவ்விடுதிக்கு நேற்று 60-க்கும் மேற்பட்டவர்கள் வருகை தந்துள்ளனர். 

இந்நிலையில், இன்று அதிகாலை விடுதியில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தை கண்டு அதிர்ந்துபோன மக்கள் உயிரை கையில் பிடித்தவாறு ஓட்டம் பிடித்தனர். 

thailand

சிலர் இடிபாடுகளில் சிக்கி தீயில் மாட்டிக்கொண்ட நிலையில், மொத்தமாக 13 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 40 பேர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.