ஆசையாக அழைத்து பேன்டீன் ஷாம்பு கொடுத்த வைரமுத்து - புயலை கிளப்பிய பாடகி சுசித்ரா.!
அட கடவுளே..!! நர்சரி பள்ளி மாணவனை தூக்கி வீசிய பள்ளி ஆசிரியை..! பதறவைக்கும் சம்பவம்..
பள்ளி மாணவன் ஒருவரை ஆசிரியை தூக்கி வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரின் ஷா ஆலம் பகுதியில் அமைத்துள்ள நர்சரி பள்ளி ஒன்றில் குறிப்பிட்ட காரணத்திற்காக மாணவர்களை வரிசையில் நிற்கும்படி ஆசிரியை வலியுறுத்துகிறார். அனைத்து குழந்தைகளும் வரிசையில் நின்றநிலையில், ஒரு சிறுவன் மட்டும் தரையில் அமர்ந்தவாறு இருந்துள்ளான்.
இதனை பார்த்த ஆசிரியை ஒருவர் அந்த சிறுவனை எழுந்து வரிசையில் நிற்கும்படி கூறுகிறார். ஆனால் அந்த சிறுவன் தொடர்ந்து அமர்ந்திருந்தநிலையில், பொறுமை இழந்த ஆசிரியை அந்த சிறுவனை இரண்டு முறை தூக்கி முன்னே வீசுகிறார். இதனை பார்த்த சக மாணவர்கள் அதிர்ச்சியில் மிரண்டுபோய் நிற்கின்றனர்.
Source: Negeri Sembilan Kini
இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி கடும் வைரலானநிலையில், சம்மந்தப்பட்ட ஆசிரியை போலீசார் கைது செய்து பின்னர் ஜாமினில் விடுதலை செய்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோர் கொடுத்த புகாரை அடுத்து சம்மந்தப்பட்ட ஆசிரியை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது.
அந்த பெண் மீதான குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில், அந்த ஆசிரியருக்கு சிறுவர் துஷ்பிரயோக சட்டத்தின் கீழ் RM 20,000 அல்லது 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.