தமிழகம் உலகம்

அமெரிக்காவில் அதிரடியாக கைது செய்யப்பட்ட தமிழக தம்பதியினர் , இதற்காகவா ? காரணத்தை கேட்டா ஷாக் ஆகிருவிங்க .!

Summary:

அமெரிக்காவில் அதிரடியாக கைது செய்யப்பட்ட தமிழக தம்பதியினர் , இதற்காகவா ? காரணத்தை கேட்டா ஷாக் ஆகிருவிங்க .!

சேலம் மாவட்டம் செட்டூரைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி மாலா. இவர்களுக்கு 6 மாதங்களுக்கு முன்பு இரட்டை குழந்தைகள் பிறந்தது. இவர்கள் அமெரிக்காவில் புளோரிடாவில் வசித்து வருகின்றனர். 

இந்நிலையில் சமீபத்தில் இவர்களது மகள் ஹிமிஷாவின் கையில் வீக்கம் ஏற்பட்டதால், மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் ஸ்கேன் எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.ஆனால், குழந்தையின் உடல்நிலை மற்றும் செலவை மனதில் கொண்டு பிரகாஷ்   வேறு மருத்துவமனையில் ஆலோசனை  செய்ய முடிவு செய்து மருத்துவரிடம் ஸ்கேன் எடுக்க வேண்டாம் என்றும், குழந்தையை அழைத்து செல்வதாகவும் தெரிவித்துள்ளனர். 

ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்து  மருத்துவமனை நிர்வாகம் , குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பிற்கு தகவல் கொடுத்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, குழந்தை பராமரிப்பில் அலட்சியம் காட்டியதாக பிரகாஷ்-மாலா தம்பதியினரை  போலீசார்  கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் குழந்தையை அவர்களுடன்  கொண்டு சென்றுவிட்டது.

பின்னர்,  பிரகாஷ் தம்பதி ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். எனினும், குழந்தை அவர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை.மேலும் இது குறித்து இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு உதவி கேட்டபோது , தனிப்பட்ட வழக்குகளில் தலையிடுவதில்லை என தூதரகம் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், சேலத்தில் உள்ள பிரகாஷின் பெற்றோர் தமிழக முதல்வரை சந்தித்து இதுதொடர்பாக மனு அளித்துள்ளனர்.


Advertisement