இத சொன்னது ஒரு குத்தமா?? விமான பணிப்பெண்ணின் முகத்தில் குத்தி பல்லை உடைத்த இளம் பெண் பயணி.. வைரல் வீடியோ..

இத சொன்னது ஒரு குத்தமா?? விமான பணிப்பெண்ணின் முகத்தில் குத்தி பல்லை உடைத்த இளம் பெண் பயணி.. வைரல் வீடியோ..



 Southwest Airlines flight attendant was punched by a passenger

சீட் பெல்ட் அணியுமாறு கூறியதற்காக பெண் ஒருவர் விமானப் பணிப்பெண்ணை தாக்கியதில் அவருக்கு இரு பற்கள் உடைந்த வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவில் விமான சேவை வழங்கி வரும் சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸூக்கு சொந்தமான விமானத்தில் பயணித்த பெண் ஒருவரிடம் சாண்டியாகோ பன்னாட்டு விமான நிலையத்தில் விமானம் தரையிறங்க தயாராகிக்கொண்டிருந்தபோது முன்னெச்சரிகையாக சீட் பெல்ட் அணியுமாறு விமானப் பணிப்பெண் அந்த பெண்ணிடம் கூறியுள்ளார்.

விமானபணிப்பெண் சொன்னதை கேட்டு கோவமடைந்த அந்த பெண், விமான பணிப்பெண்ணை சரமாரியாக தாடை பகுதியில் தாக்கியுள்ளார். இந்நிலையில் தாடை பகுதியில் தாக்கியத்தில் இரண்டு பற்கள் உடைந்து போயின. இதை கண்டு பயணம் செய்த சகபயணிகள் சண்டை போடாமல் அமைதியாக இருக்கையில் அமறுங்கள் என்று கூறியுள்ளனர்.

பின்னர் பயணித்த ஒருவர் எழுத்துநின்று விமானப் பணிப்பெண்ணை ஏன் அடிக்கிறீர்கள்? என்றும், அவர்களுடைய பணியை செய்வதில் என்ன தவறு? ஒத்துழைப்பு கொடுக்க வேண்டியது உங்களின் கடமை என்றும் சக பயணிகள் அந்த பெண்ணிடம் கூறியுள்ளனர். பின்னர் விமானம்  தரையிறங்கியபிறகு, அந்த பெண்ணை கைது செய்த காவல்துறையினர், பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்த வீடியோ தற்போது இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.