30 ஆண்டுகளுக்கு முன் தகனம் செய்யப்பட்ட தாயின் கல்லறையில் இருந்த ஓட்டை! 41 வயதில் அதன் உள்ளே கைவிட்டு பார்த்த மகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

பிரித்தானியா நாட்டில் 30 வருடங்களுக்கு முன் உயிரிழந்த தனது தாய் தகனம் செய்யப்பட்ட இறுதிச்சடங்கு நடந்த இடத்திற்கு சென்ற மகன் தனது தாயின் சாம்பல் பிளாஸ்டிக் கவரில் அடைக்கப்பட்டு வைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
பிரித்தானியாவில் குறிப்பிட்ட பகுதியில் உயிர் இழந்தவர்களின் உடலை தகனம் செய்து அவர்களது சாம்பலை பானையில் அடைத்துவைப்பது வழக்கம். அந்த வகையில் தற்போது 41 வயதாகும் Mark Harris என்பவரின் தாய் 30 வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்த நிலையில் அவர் உடல் தகனம் செய்யப்பட்டு கல்லறையின் அருகே அவரின் சாம்பல் பானையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு புதைக்கப்பட்டது.
இந்நிலையில் புதிதாக செய்யின் ஒன்றினை வாங்கிய Mark Harris அந்த செயினில் தனது தாயின் சாம்பலை அடைத்துவைத்து அணிந்துகொள்ள ஆசை பட்டு தனது தாய் தகனம் செய்ய்ய்யப்பட்ட இடத்திற்கு சென்றுள்ளார். தாயின் கல்லறைக்கு சென்ற போது அங்கு பெரிய ஓட்டை ஓன்று இருந்துள்ளது.
ஓட்டையில் கைவிட்டு பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். காரணம் பாரம்பரிய முறைபடி இல்லாமல் அவரது தாயின் சாம்பல் ஒரு பிளாஸ்டிக் கவரில் அடைத்து ஒழுங்கற்ற முறையில் வைக்கப்பட்டிருந்தது. இது Mark-ஐ பெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
இதனை அடுத்து நடந்த விசாரணையில் மார்க்கின் தாயின் சாம்பல் வைக்கப்பட்ட இடத்தை யாரோ ஒருவர் உடமைகளை திருடுவதற்காக குழிபறித்து இருக்கலாம், அல்லது விலங்கு ஏதாவது குழிபறித்து சாம்பல் இருந்த பானையை உடைத்திருக்கலாம். கீழே கொட்டிய சாம்பலை அங்கிருந்த யாரேனும் பிளாஸ்டிக் கவரில் சுற்றி உள்ளே வைத்திருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.