உலகம் லைப் ஸ்டைல்

வைரல் வீடியோ: தூங்கிக்கொண்டிருந்த இளம் பெண்ணின் வாய் வழியாக வயிற்றுக்குள் சென்ற பாம்பு..! அதிர்ச்சி வீடியோ காட்சி.!

Summary:

Snake entered into women stomach while sleeping

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பெண் ஒருவரின் வாய்க்குள் நான்கு அடி நீள பாம்பு ஒன்று சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

ரஷ்ய நாட்டின் லவாசி என்ற பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்துள்ளார். ஆழ்ந்த தூக்கத்திற்கு பிறகு கண் விழித்த அவருக்கு வயிற்றில் ஏதோ நெளிவது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டுள்ளது. 

உடனே மருத்துவரிடம் சென்று விவரத்தைக் கூறியுள்ளார் அந்த பெண். மருத்துவர்கள் அந்த பெண்ணை பரிசோதனை செய்து அவர் வாய் வழியாக எண்டோஸ்கோப்பி மூலம் உள்ளே நுழைந்த பொருளை வெளியே எடுக்க முயற்சி செய்துள்ளனர். 

இந்த முயற்சியில் அந்தப் பெண்ணின் வாய் உள்ளே இருந்து நான்கு அடி நீள பாம்பு ஒன்றை மருத்துவர்கள் வெளியே எடுத்து உள்ளனர். அந்தப்பெண் தூங்கிக்கொண்டிருந்த போது அவரது வாய் வழியாக 4 அடி நீள பாம்பு ஒன்று அவரது வயிற்றுக்குள் நுழைந்துள்ளது.

தற்போது ருத்துவர்கள் அந்தப் பாம்பை வெளியே எடுக்கும் காட்சிகள் வெளியாகி பார்ப்போரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இதோ அந்த வீடியோ காட்சி.


Advertisement