மருமகனை திருமணம் செய்த அத்தை! ஹனிமூன் போறீங்களா..? இப்படி நீங்க பண்ணுனா இத பண்ணிடுவோம்! அதிர்ச்சி பதில்! வைரலாகும் வீடியோ...

பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் நிகழ்ந்த காதல் திருமணம் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. முதற்கணவரை விட்டு, தன் மருமகனை திருமணம் செய்த பெண் ஆயுஷி தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
ஆயுஷி என்ற பெண் ஏற்கனவே திருமணமானவர். ஒரு மகனையும் பெற்றுள்ள இவர், தன் கணவனும் மாமியாரும் தன்னை உடல்ரீதியாகவும் மனதளவிலும் துன்புறுத்தியதாக குற்றம்சாட்டியுள்ளார். “என் கணவரை ஒருபோதும் நேசிக்கவில்லை. என் குடும்பம் கட்டாயமாக அந்த திருமணத்தை நடத்தியது. ஆனால் மருமகனுடன் உரையாட ஆரம்பித்த பிறகு தான் உண்மையான காதல் எனக்கு ஏற்பட்டது,” என கூறினார்.
கிராம மக்கள் அதிர்ச்சி
மருமகனுடன் காதல் வளர்ந்ததால், கணவனை விட்டு திருமணம் செய்ய ஆயுஷி முடிவு செய்தார். இதற்கு கிராம மக்கள் மற்றும் குடும்ப உறவினர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். இருப்பினும், பஞ்சாயத்து முன் இருவரும் தங்கள் உறவை ஏற்றுக்கொண்டனர். மேலும், “ஒன்றாக வாழ்ந்து இறப்போம்” என்ற உறுதியுடன் புதிய வாழ்க்கையை தொடங்கினர்.
இதையும் படிங்க: இளைஞரின் உயிரை காவு வாங்க சென்ற ராஜநாகம்! நொடியில் நடந்த அதிசயம்! திக் திக் நிமிட காணொளி...
சமூக வலைதளங்களில் வைரலான வீடியோ
திருமணத்திற்குப் பிறகு, ஆயுஷி பதிவிட்ட ஒரு ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர் பாடலுக்கு உதட்டுச்சாயம் பூசிக்கொண்டிருப்பதைக் காணலாம். ஒருவரின் கேள்விக்கு அவர், “யாராவது நம்மை வாழவைத்தால்தான் தேனிலவுக்கு போவோம். எங்களை தொந்தரவு செய்தால் விஷம் குடித்துவிடுவோம். ஆனால் எப்போதும் இறக்க நினைக்கல” என பதிலளித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் கலந்துரையாடல்
இந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் சமூக முறைகள், மண உறவுகள் மற்றும் முரண்பான உறவுகளின் குறைபாடுகள் குறித்து பெரும் விவாதத்தை தூண்டியுள்ளது. ஆயுஷியின் செயலை சிலர் ஆதரிக்க, பலர் கண்டிக்கின்றனர்.
बिहार के जमुई में भतीजे से शादी करने वाली चाची एक बार फिर सुर्खियों में हैं। अब दोनों का एक नया वीडियो सोशल मीडिया पर वायरल हो रहा है, जिसमें वे काफी खुश नजर आ रहे हैं।#Bihar #Jamui pic.twitter.com/W4qHfDDJ7m
— NBT Bihar (@NBTBihar) June 28, 2025