உலகம்

பள்ளிமாணவிக்கு ஏற்பட்ட திடீர் மாதவிடாய்.! ஆசிரியர் செய்த மோசமான காரியத்தால் துடிதுடிக்க நேர்ந்த விபரீதம்!!

Summary:

school girl commit suicide for teacher teasing her

கென்யாவின் தலைநகர் நைரோபிக்கு அருகே கபியாங்கேக் என்ற பகுதியில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டுவருகிறது. அங்கு படித்து வந்த 14 வயது சிறுமிக்கு எதிர்பாராதவிதமாக திடீரென மாதவிடாய் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சிறுமியிடம் நாப்கின் எதுவும் இல்லாததால் ஆடை முழுவதும் வீணாகியுள்ளது. இதனை கண்ட ஆசிரியர் வகுப்பறையில் அனைவர் முன்பும் அவரை அவமானப்படுத்தியுள்ளார். மேலும் அவரை வகுப்பை விட்டு வெளியேறுமாறு கடுமையாக திட்டியுள்ளார்.

இதனால் மனமுடைந்த மாணவி இதுகுறித்து தனது தாயிடம் கூறி அழுதுள்ளார்.பின்னர் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பள்ளியின் முன்பு போராட்டத்தில் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அதனைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் போராட்டத்தை கட்டுப்படுத்தினர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement