6 மாத  கர்ப்பிணியை குடிபோதையில் சீரழித்த வீரர்.. 20 பேரை கூட்டிட்டு வருவேன் என மிரட்டல்..! பதறவைக்கும் சம்பவம்.!!russian-troop-sexual-abused-pregnant-girl

உக்ரைன் மீது ரஷியா பிராந்திய பாதுகாப்பு கருதி போர்தொடுத்து சென்றுள்ள நிலையில், கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இதனால் அந்நாட்டு மக்கள் அண்டை நாடுகளுக்கு அகதியாக குடிபெயர்ந்துள்ளனர். உக்ரைனும் மேற்கு ஏகாதிபத்திய நாடுகளின் உதவியை நேரடியாக பெற்று ரஷியாவுக்கு எதிராக போராடி வருகிறது. இருதரப்பிலும் பல சேதங்கள், இழப்புகள் நிகழ்ந்துள்ளன. இதுஒருபுறமிருக்க, உக்ரைன் பெண்களை ரஷிய வீரர்கள் பலாத்காரம் செய்வதாக குற்றசாட்டு முன்வைக்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள கேர்சன் கிராமத்தை சேர்ந்த கர்ப்பிணி பெண்மணி ஆங்கில ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில், "நாங்கள் வீட்டின் அடித்தளத்தில் இருந்தோம். உணவு கொடுக்க மாலை நேரத்தில் வெளியே வந்தபோது, ரஷிய வீரர் எங்களை பார்த்துவிட்டார். என்னுடன் 12 வயது மற்றும் 14 வயது சிறுமிகள் இருந்த நிலையில், என்னை தனியே அழைத்து சென்று ஆடைகளை களைந்து நிர்வாணமாக நிற்க கூறினார். 

நான் முடியாது என்றதற்கு, என்னுடன் நீ உல்லாசமாக இல்லாத பட்சத்தில் 20 பேரை அழைத்து வந்து அனைவரையும் சீரழிப்பேன் என்றார். மதுபோதையில் இருந்த ரஷிய வீரர் என்னை பலாத்காரம் செய்தார். எனது அலறல் சத்தம் கேட்டு வந்த மற்றொரு ரஷிய வீரர், நடக்கும் துயரத்தை கண்டு என்னை சீரழித்த வீரரை தடுத்து நிறுத்தினார்" என்று தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.