என்னது.. சினிமாவில் இருந்து விலக இதுதான் காரணமா.! வெளிப்படையாக போட்டுடைத்த நடிகை ரம்பா.!
எப்படி வந்துச்சுனு யாருக்கும் தெரியல.! 100 அடில திடீர் பள்ளம்..! இப்படி மொத்தம் 9 பள்ளம்..! ரஷ்யாவில் நடக்கும் மர்மம்.!

ரஷ்ய நாட்டில் 9 வது முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள மர்ம பள்ளம் ஒன்று அந்நாட்டு விஞ்ஞானிகளிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்ய நாட்டில் கடந்த 2013ம் ஆண்டு முதல் அந்நாட்டின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மர்மமான பள்ளங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த பள்ளங்கள் எப்படித் தோன்றியது? எதனால் உருவானது என எந்த கேள்விகளுக்கும் அங்குள்ள எவரிடமும் பதில் இல்லை.
இந்நிலையில் ரஷ்யாவின் தொலைக்காட்சிக் குழுவினர் சிலர் சைபீரியாவில் உள்ள பகுதியில் தற்போது மீண்டும் ஒரு மர்ம பள்ளத்தினை கண்டுபிடித்துள்ளனர். அந்தப் பள்ளம் 100 அடி ஆழமும் 70 அடி அகலமும் கொண்ட ஒரு பிரம்மாண்ட பள்ளமாக கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 2013ஆம் ஆண்டிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட மர்ம பள்ளங்களை இந்த பள்ளம் ஒன்பதாவது என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். விண்கற்கள் விழுந்ததால் ஏற்பட்ட பள்ளமா? அல்லது பறக்கும் தட்டுகள் இறங்கியதால் உண்டான பள்ளமா? அல்லது நிலத்தடியில் ராணுவ ரகசிய அறையில் இருந்து இருக்கலாமா? என்று பல்வேறு தகவல்கள் இந்த பள்ளங்கள் குறித்து பரவி வருகிறது.
அதேநேரம் மீத்தேன் வாயு வெடிப்பினால் இந்த பள்ளங்கள் ஏற்பட்டு இருக்கலாம் என்ற நோக்கிலும் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.