அமெரிக்க தூதரகம் அருகே அடுத்தடுத்து பாய்ந்த ஏவுகணைகள்! அதிர்ச்சியில் அமெரிக்கா!

அமெரிக்க தூதரகம் அருகே அடுத்தடுத்து பாய்ந்த ஏவுகணைகள்! அதிர்ச்சியில் அமெரிக்கா!


rockets-attack-near-us-embassy


சமீபத்தில் அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலில் ஈரான் ராணுவ உளவு படைப்பிரிவின் தலைவர் ஜெனரல் குவாசிம் சுலைமானி மற்றும் முக்கிய அதிகாரிகள் கொல்லப்பட்டனர். இதனால், அமெரிக்கா, ஈரான் இடையே பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஈராக் நாட்டின் தலைநகர் பாக்தாத்தில் அதிக பாதுகாப்பு நிறைந்த பசுமை மண்டல பகுதியில் அமெரிக்க தூதரகம் அமைந்துள்ளது. அங்கு மூன்று ராக்கெட்டுகள் விழுந்ததாக ஈராக் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த தாக்குதலால் நடந்த சேதாரங்கள் குறித்த விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.

இதனை அடுத்து போலீசார் அந்த பகுதியில் குவிக்கப்பட்டனர்.  இந்த தாக்குதலை ஈரான் ஆதரவு பெற்ற துணை ராணுவ படை குழுக்கள் நடத்தியுள்ளன என அமெரிக்கா குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது. ஆனாலும் இந்த தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இரு நாடுகளுக்கு இடையே போர் மூளும் சூழ்நிலை எழுந்துள்ள நிலையில், ஈஇந்த ஏவுகணை தாக்குதல்கள் நடந்திருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.