11 வருஷமாச்சு.. கொண்டாட்டத்தில் மிர்ச்சி செந்தில்.! அவரது அழகிய மகனை பார்த்தீங்களா!!
அப்பா மிக பெரிய கோடீஸ்வரர்..! ஆனால், வாடகை வீட்டில் தங்கி வேலைக்கு நடந்து செல்லும் மகன்.. ! என்ன காரணம் தெரியுமா.?

ரஷ்யா நாட்டில் உள்ள மிகப்பெரிய செல்வந்தர்கள் பட்டியலில் 11 வது இடத்தில் இருப்பவர் மிக்கெய்ல் ஃப்ரிட்மேன். இவரது 19 வயது மகன் அலெக்சாண்டர் ஃப்ரிட்மேன் கடந்த ஆண்டு லண்டனில் தனது பள்ளி படிப்பை முடித்துவிட்டு தந்து சொந்த நாட்டுக்குத் திரும்பியுள்ளார்.
சொந்த நாட்டிற்கு வந்துள்ள அலெக்சாண்டர் ஃப்ரிட்மேன் சொந்தமாக தொழில் ஒன்றை தொடங்கியதோடு, வாடகை வீட்டில்தான் தங்கியுள்ளார். மேலும், தனது அலுவலகத்திற்கு தினமும் நடந்துதான் செல்கிறாராம் அலெக்சாண்டர் ஃப்ரிட்மேன்.
இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, என்னுடைய தந்தை அவர் சம்பாதித்த சொத்துகளை தான தர்மம் செய்ய இருப்பதாக சொல்லியிருக்கிறார். அதனால், அந்த சொத்துகள் யாவும் எனக்கு சொந்தமில்லை என்ற கருத்தோடு நான் வாழ்ந்து வருகிறேன்.
எனவே எனது சொந்த முயற்சியால் தற்போது தொழில் ஒன்றை தொடங்கி, அதில் வரும் பணம் மூலமே சாப்பாடு, வீட்டு வாடகை எல்லாம் செலுத்தி வருகிறேன் என கூறியுள்ளார். அப்பன் பணத்தில் குடி, கும்மாளம் என ஜாலியாக ஊர் சுற்றும் பிள்ளைகள் இருக்கும் இந்த உலகில் அலெக்சாண்டர் ஃப்ரிட்மேனின் இந்த முயற்சிக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை கூறிவருகின்றனர்.