கொரோனாவால் பசியில் வாடிய மக்கள்! உணவுக்காக 4 கி.மீ. தூரம்  வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்!

கொரோனாவால் பசியில் வாடிய மக்கள்! உணவுக்காக 4 கி.மீ. தூரம்  வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்!


Public cue for food in south africa

தென் ஆப்பிரிக்காவில் கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் உணவுக்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா ஊரடங்கால் உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கும் சூழலில், தென்னாப்பிரிக்காவில் உணவுக்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

corona
சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. இந்தநிலையில் கொரோனாவால், தென்னாப்பிரிக்காவில் இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில், 103 பேர் உயிரிழந்துள்ளனர்.  இந்த நிலையில் அந்த நாட்டிலும் ஊரடங்கு   அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில், தென்னாப்பிரிக்காவின் பிரிடோரியா நகரத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில், ஜிம்பாப்வே உள்ளிட்ட நகரத்தில் இருந்து வந்து, சட்டவிரோதமாக குடியேறிய ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் அவர்களுக்கு அரசு உதவ முன்வராததால், தொண்டு நிறுவனங்கள் உணவுகள் வழங்கி வருகின்றன. அந்த வகையில், ஒரு தொண்டு நிறுவனம் உணவு வழங்கியபோது, நான்கு கிலோமீட்டர் தூரத்துக்கு மக்கள் நீண்ட வரிசையில்  காத்திருந்தனர்.