பூட்டிக்கிடந்த வீட்டிற்குள் நுழைந்ததும் கண் முன்னே தெரிந்த அந்த காட்சி..! அருகில் சென்ற இளம் பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி.!



potato-starts-to-growing-in-lock-down

லாக்டவுன் காரணமாக வீட்டை பூட்டிவிட்டு தனது ஆண் நண்பருடன் வசித்துவந்த பெண், மீண்டும் தனது வீட்டிற்கு வந்தபோது அவர் கண்ட காட்சி தற்போது புகைப்படமாக உலகம் முழுவதும் வைரலாகிவருகிறது.

உலகம் முழுவதும்  வேகமாக பரவிவரும் கொரோனா காரணமாக பெரும்பாலான நாடுகளில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அந்த வகையில் பிரான்ஸ் நாட்டிலும் கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருந்தநிலையில் டோனா போரே என்ற மாணவி தான் வசித்துவந்த வீட்டை பூட்டிவிட்டு அருகில் இருக்கும் தனது ஆண் நண்பரின் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

சில மாதங்கள் தனது ஆண் நண்பருடன் ஊரடங்கு நாட்களை கழித்துவந்த மாணவி டோனா போரே, தற்போது சில ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து மீண்டும் தான் வசித்துவந்த வீட்டிற்கு சென்றுள்ளார். பலநாட்களாக பூட்டிக்கிடந்த வீட்டை திறந்த அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

வீட்டின் ஒரு இடத்தில் வினோதமாக இளஞ்சிவப்பு நிறத்தில் குட்சிகள் போன்றவை படர்ந்து இருந்தது. அது என்ன என்று தெரியாமல், பயத்துடனும், தயக்கத்துடனும் டோனா போரே அதன் அருகில் சென்றுள்ளார். பின்னர்தான் தெரிந்துள்ளது ளம் சிவப்பு நிறத்தில் குட்சிகள் படர்ந்திருந்தது உருளைக் கிழங்கின் தளிர்கள் என்று.

வீட்டை பூட்டிவிட்டு செல்வதற்கு முன் சமைப்பதற்காக அவர் வாங்கி வைத்திருந்த உருளைக்கிழங்கு நீண்ட நாட்கள் ஆகிவிட்டதால் கிழங்கு முளைத்து குச்சிகள் வெளியே வந்த நிலையில் இந்த புகைப்படங்களை டோனா தனது தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.