இறுதிச் சடங்கிற்காக கொண்டு செல்லப்பட்ட சவப்பெட்டி.! திறந்து பார்த்த போலீசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!

இறுதிச் சடங்கிற்காக கொண்டு செல்லப்பட்ட சவப்பெட்டி.! திறந்து பார்த்த போலீசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!



police-shocked-when-open-dead-body-box


சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா காரணமாக பெரும்பாலான நாடுகளில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இன்றுவரை கொரோனா அதிகம் பாதித்த நாடாகவும், கொரோனாவால் அதிகம் நபர் உயிரிழந்த நாடாகவும் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. கொரோனா வைரஸ் தென் ஆப்பிரிக்காவிலும் பரவியதன் காரணமாக கடுமையான விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தென்னாபிரிக்காவில் கொரோனாவிற்காக அமைக்கப்பட்டிருந்த சோதனை சாவடியில் வரும் கார்களை போலீசார் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது அந்தவழியாக
வந்த கார் ஒன்றை போலீசார் நிறுத்தி சோதனை செய்துள்ளனர்.

police

அந்த காரில் இருந்த இரண்டு நபர்கள் தாங்கள் இறுதிச் சடங்கை நடத்தும் இயக்குனர்கள் என்றும் உடலை தகனம் செய்வதற்காக சவப் பெட்டியில் உடலை வைத்து கொண்டு செல்கிறோம் என்றும் போலீசாரிடம் கூறியுள்ளனர். ஆனால் அவர்களது பேச்சில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சவப்பெட்டியை திறந்து காட்டும் படி அவர்களிடம் போலீசார் தெரிவித்துள்ளனர். போலீசாரின் வேண்டுகோளுக்கு அவர்கள் மறுத்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த போலீசார், அவர்களை காரை விட்டு இறங்கச்சொல்லி, போலிசார் சவப்பெட்டியை திறந்து பார்த்த போது, உள்ளே 30 பாக்கெட்டுகளில் கஞ்சா இருந்துள்ளது. இதன் மதிப்பு சுமார் 35,000 டாலர் என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து அவர்களை கைது செய்த போலீசார் இதுகுறித்து மேலும் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.